பக்கம்:ஆலயங்கள் சமுதாய மையங்கள்.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆலயங்கள் சமுதாய மையங்கள் இ. 163

இணை அன்பே அன்பிற்கு விலை அன்பே இத்தகைய உயர்ந்த அன்பை நிறையப் பெறுவதன் மூலம் வளமான வாழ்க்கையைப் பெறலாம். பதினெட்டாம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் பிரதமராயிருந்த லார்டு பாமர்க்ஸ்டன் என்பவர், "கடவுளை நோக்கிப் பிரார்த்தனை செய்கிற நேரத்தில், உங்கள் சுற்றுப்புறத்திலுள்ள அழுக்குகளை யெல்லாம் அப்புறப்படுத்துங்கள்” என்று கூறினார். கடவுளின் படைப்புகளுக்கு நன்மை செய்யாமல், இவ்வுலகத்தை, இயக்கும் கடவுளின் குறிக்கோளுக்கு அரணாக இல்லாமல் அவரை நோக்கிப் பிரார்த்தனை செய்வதன் அறியாமையை இந்த உரை புலப்படுத்துகிறது. நமது திருமூலரும்,

"நடமாடுங் கோயில் நம்பர்க் கொன்றியில் படமாடுங் கோயில் பகவற்கங்காமே”

என்று கூறியதையும் எண்ணுக. ஆதலால், உள்ளத்தில் அன்பை நிறைத்திடுக! யார் மாட்டும் அன்பு காட்டுக! அன்பெனும் புனலால் Յ)!6Ո ԼՈՒTՃԾI வாழ்க்கையைப்

படைத்திடுக!

திருவள்ளுவர், வாழும் நெறிகளைப் பெரும்பாலும் உடன்பாட்டு முறையிலேயே கூறியுள்ளார். மிகச் சிலவற்றையே எதிர்மறையாகக் கூறி விளக்கியுள்ளார். அவற்றுள் நாணுடைமை என்பதும் ஒன்று. நாணுடைமை என்பது பழிக்கு அஞ்சுதல். புகழுக்கு எதிர்மறை பழி.

"புகழ் எனின் உயிரும் கொடுக்குவர்

பழி எனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்”

என்பது புறநானூறு. நானுதலாவது பிறர் பழிக்கத்தக்க செயல்களைச் செய்ய வெட்கப்படுதல். உயிர்த் தொகுதியி