፵
14 ஜீ குன்றக்குடி அடிகளர்
இறைவன் திரு முன்னர் கடலை, பயறு வகைகள் சுண்டரி செய்து, படைத்துப் பெரியோர்க்கும் சிறப்பாகக் குழந்தை களுக்கும் வழங்கினர். இங்ங்னம் நுகர்பொருள் எல்லோருக்கும் ஒரே முறையில் எளிய முறையில் கிடைக்கச் செய்யும் வாழ்க்கையிலும் சிறந்த ஒப்புரவு வேறு என்ன இருக்க முடியும்: உடையவர்கள் திருக்கோயிலில் இறைவனின் பெயரால் காணிக்கை இடுவார். இந்தக் காணிக்கைப் பொருளைக் கொண்டு வாய்ப்பற்றவர்களுக்கும் வாய்ப்புகளை நல்கி வளமுடை யராக்கத் திட்டம் தீட்டி - அவ்வழி வளமாற வளர்த்து மகிழ்வர். ஆதலால், திருக் கோயிலைச் சார்ந்து வளர்ந்த ஒப்புரவு வாழ்க்கை, புகழ்ந்து பாராட்ட வேண்டியதொன்று.
கல்விச் சாலை
மனிதன் வளர்ச்சியடைய கல்வி தேவை; கேள்வி தேவை. கல்வியும் கேள்வியும் எளிதில் பெறும் சமுதாயமே மேம்பாடடைய முடியும். 'கற்றல் கேட்டல் உடையார் பெரியார் என்று திருஞான சம்பந்தர் அருளிச் செய்து s_6іт&Trrfr. இத்தகைய அருமையான கல்வியினைத் திருக்கோயில் வழங்கியது. திருவாவடுதுறைத் திருக்கோயிலில் இலக்கணம் கற்றுத் தரும் கல்விச் சாலை இருந்ததாகக் கல்வெட்டுக் கூறுகிறது. திருவாமாத்துர்த் திருக்கோயிலில் திருமுறை பயிற்றுவிக்கும் கல்விச்சாலை இருந்ததாகக் கல்வெட்டுக் கூறுகிறது. திருக்கோயில்களில் பட்டி மண்டபங்கள் நிகழ்ந்துள்ளன. ஆதலால், திருக்கோயில்கள் கடவுட் கோயில்களாக மட்டுமின்றிக் கல்வி கற்பிக்கும் அமைப்புகளாகவும் விளங்கின என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. ... --