ஆலயங்கள் சமுதாய மையங்கள் தி 19
மட்டுமின்றித் திருக்கோயிலைச் சார்ந்திருந்த ஊர்ச் சபைகளும் உதவிகளைச் செய்துள்ளன.
நீதி சபை
மானிட வாழ்க்கையென்பது பிரச்சினைகளுக்கு உரியதுதான்். பிரச்சினைகளே இல்லாத வாழ்க்கை சார மற்றது; சுவையற்றது. ஆனால், வாழ்க்கையில் பிரச்சினை களைச் சந்திக்கின்றபொழுது மனிதன் நிதான்மாக நின்று சிந்திக்கத் தவறக்கூடாது. அறிவை இழந்துவிடக் கூடாது; ஆத்திரப்படக்கூடாது. எந்தச் சூழ்நிலையிலும் வாழ்க்கையின் செயற்பாடுகள் நீதியோடு தொடர்புடையனவாக அமைதல் வேண்டும். நமது சமயமே "நீதி"யென்று பெயர் பெற்றது. மாணிக்கவாசகர் இறைவனை நீதியென்றே அழைப்பர்.
"பங்கயத் தயனுமால் அறியா நீதியே செல்வத் திருப் பெருந்துறையில் நிறைமலர்க் குருந்தமே வியகீர் ஆதியே”
என்பது திருவாசகம். திருக்கோயிலை மையமாகக் கொண்டு நீதி விளங்கியது. திருக்கோயில்களில் நீதி வழங்கு சபைகள் இருந்தன. அந்தச் சபைகள் வழங்கிய நீதிகள் வரலாற்றுப் புகழுடையன. திருக்கோயில் தத்துவத்தில் கடவுளும் நீதிக்குக் கட்டுப்பட்டவர். கடவுளும் தனக்கு ஏதாவது வழக்கு இருப்பின் தான்ே அடாவடித்தனமாக அடித்துப் பிடுங்க முடியாது. உவமையில்லாத தலைவனும் கூடத் திருக்கோயிலில் விளங்கும் பஞ்சாயத்தார் முன்னே நீதி கேட்டு நிற்கத்தான்் வேண்டும்! திருவெண்ணெய் நல்லூரில் எழுந்தருளியிருக்கும் இறைவனுக்கும், நற்றமிழ்ச் சுந்தரருக்கும் இடையேயிருந்த வழக்கைக் கூறி, இறைவன் திருவெண்ணெய்