22 தி குன்றக்குடி அடிகளர்
கூரும் திருமணம். ஒரு நம்பியோ ஒரு நங்கையோ திருமணம் நிகழும் வரையில்தான்் பிறந்த நாள் கொண்டாடலாம். திருமணம் நிகழ்ந்த பிறகு திருமண நாளே அவர்களின் நன்னாள்; அடிக்கடி நினைவு கூர்ந்து மகிழ வேண்டிய நன்னாள். இறைவன் உயிர்களுக்குப் போகம் - அதாவது இன்பம் வழங்குவதற்காகவே தமது ஆளுடைய நாயகியைக் கரும்புவில் ஏந்தச் செய்திருக்கின்றான். கரும்புவில் போகத் தின் சின்னம். சுந்தரருக்குத் திருமணம் செய்து வைத்தான்். இறைவன். தான்் விரும்பிய காதலனை மணக்க முடியாமல் தடை செய்கின்ற, கொடுமை செய்கின்ற மனிதர் இன்று போலவே பண்டும் இருந்தனர். அத்தகையோரை மறுத்துப் போராடி, ஒரு பெண் தான்் விரும்பிய ஒரு காதலனை மணக்கத் துணை செய்தவன் இறைவன். இறைவன் அடியாராகிய திருஞானசம்பந்தரும் திருமருகலில் செட்டிப் பெண்ணுக்குத் திருமணம் செய்து வைத்த பெற்றிமையை எங்ங்ணம் புகழ முடியும்! ஆதலால் திருக்கோயில், மனையறத்தின் மாண்பறத்தையும் விளக்கியது; வளர்த்தது; மனித குலம் தலைமுறை தலைமுறையாகத் தழைத்து வளர வழி கண்டது. . -
புலவி தீர்த்தல்
பேரன்புடையீர், திருக்கோயில் அமைப்பில் வளர்ந்தவை திருமணங்கள் மட்டுமல்ல, கற்பியல் வாழ்க்கை யில் அறிந்தோ அறியாமலோ ஊடலும் ஊடல் முற்றிய நிலையில் புலவியும் தோன்றி வருகின்றன. இதனால் கருத்தொருமித்து வாழ வேண்டிய இருவர், உள்ளத்தால், உணர்வால் பிரிந்து விடுகின்றனர். இந்தப் பிரிவு வருந்தத் தக்க பிரிவு! இத்தகைய பிரிவு, இருபாலாருக்கும் பெருந் துன்பம் தருவது. இத்தகைய பிரிவுகளைத் திருக்கோயில்கள்