ஆலயங்கள் சமுதாய மையங்கள் ஜி. 25
இருந்தான்்; ஆட்களும் பிடித்து அமர்த்தினான். சுந்தரர் "பித்தன்” என்றும் "மகத்திற் புக்கதோர் சனி” என்றும் திட்டித் தீர்த்ததை மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டான். இவை மட்டுமா? சேரமான் பெருமாளை அறிமுகப்படுத்தி, மற்றொரு தோழனாக்கிக் கொடுத்தான்். அதன் வாயிலாக யானை ஏற்றம், குதிரை ஏற்றம் முதலிய விளையாட்டுக்களில் ஈடுபடும் வாய்ப்பினைத் தந்தான்். ஆயினும் தமக்கினிய தோழராகிய ஆருரருக்கு வேண்டிய பொன்னைத் தாமே கொடுக்க வேண்டும்; மற்றவர்களிடம் வாங்கக் கூடாது என்ற நட்புறவின் முதிர்ச்சியால் - திருமுருகன் பூண்டித் திருக்கோயில் வளாகத்தில் வழிப்பறிவும் செய்து விளையாடுகின்றான். என்னே அற்புதம்! வாக்கு மனத்துக்கு அப்பாற்பட்ட ஆற்றல் மிக்க பொருளாகிய கடவுள் வாழ்க்கையின் முதலாக மட்டுமல்லாமல் வாழ்க்கையின் இனிய தோழனாகி, உற்றுழி உதவியும் விளையாடியும் வாழ்க்கையை உய்த்துச் செலுத்தத் துணையாக இருந்த திருக்கோயில் தத்துவம் ஈடு இணையற்றது.
அன்பின் இயக்கம்
திருக்கோயில் தத்துவம் ஒரு அன்பின் இயக்கம். திருக்கோயில் அன்பினால் எழுந்தது. திருக்கோயில் அன்பினால் வளர்ந்தது. திருக்கோயில், வாழும் மனித குலத்தை அன்பினால் இணைத்தது; ஒருங்கிணைத்தது. அன்பு ஒரு சொல்லன்று. அஃது ஒர் ஆற்றல்! அன்பு ஒரு நுகர்பொருள்! இறைவன் உயிர்களிடத்திலுள்ள அன்பை நுகர்வதற்காக எழுந்தருளிப் போந்தமையை எண்ணற்ற வரலாறுகளில் காண முடிகிறது. திருப்பனந்தாள் திருக் கோயிலில் எழுந்தருளியுள்ள இறைவனைத் தாடகை என்ற