26 தி குன்றக்குடி அடிகளார்
பிராட்டியார், தாமே மலரெடுத்துத் தொடுத்த மலர்மாலை களைச் சார்த்திப் பூசித்து வருகிறார். தொடக்கக் காலத்தில் திருக்கோயில்களில் இன, குல வேறுபாடின்றி, ஆண்-பெண் வேறுபாடின்றி, அனைவரும் பூசிக்கலாம் என்ற நெறிமுறை இருந்தது! அந்தக் காலத்தில் அம்மையார் பூசித்தார். ஒருநாள் இறைவனுக்குத் தாடகைப் பிராட்டியாரின் அன்பைத் துய்த்து மகிழவும் மற்றவர்க்குப் புலப்படுத்தவும் வேண்டும் என்ற உணர்வு பிறந்தது. தாடகையார் மலர்மாலை எடுத்து இறைவனுக்கு சார்த்தப் புகும் நேரத்தில், அவர்தம் இடுப்பு உடை நெகிழ்கிறது. தாடகையாருக்கு அறச்சங்கடம். தாடகையாரின் அறச்சங்கடத்தை அறிந்த பெருமான் குனிந்து மாலை ஏற்றுக்கொள்கிறார்! அதனால் தாடகை யாரின் இரண்டு நோக்கங்களும் நிறைவேறி விட்டன. பெருமான் திருமேனியை வளைத்தது அன்பின் ஆற்றல்
அல்லவா? இங்ங்னம் திருமேனி வளைந்த இறைவன் . நிமிராமலேயே இருந்துவிட்டான். இதனைக் கண்ட சோழப் பேரரசு, பெரிய சங்கிலிகளைப் போட்டு யானைகளைக் கட்டியிழுக்கச் செய்தது! இறைவன் திருமேனியோ நிமிரவில்லை! இந்தச் செய்தி திருக்கடவூரில் வாழ்ந்த குங்குலியக்கலயர் என்ற பெருமகனாருக்கு எட்டுகிறது. அவர் திருப்பனந்தாள் வருகிறார். இறைவனைக் கூர்ந்து பார்க்கிறார். குங்குலியக் கலையர் அன்பில் விளைந்த ஆன்மா உடையவர். அவர் இறைவன் திருமேனியை நிமிர்ப்பதற்காகத் தனது கழுத்தில் ஒரு கயிற்றைப் போட்டுக் கொண்டு இழுக்கிறார்! உடன் பெருமான் திருமேனி நிமிர்கிறது. ஏன் நிமிர்கிறது? பெருமானையும் குங்குலியக் கலயரையும் பிணைத்திருந்த கயிறு குங்குலியக் கலயரின் உடலை வருத்துமே என்று கருதிப் பெருமான் தன் திருமேனி