ஆலயங்கள் சமுதாய மையங்கள் 33
நைவிக்கும், திருத்தேர் விழா, சமுதாயம் ஒருங்கிணைந்து வலிமையுடனிருப்பதை எடுத்துக் காட்டும் விழா, உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் ஓரணியில் நின்று தேர் இழுக்கும் காட்சி, சமுதாயம் ஓர் உருப் பெற்றுள்ள காட்சியைப் புலப்படுத்தும். என்டையாலும் உயரத்தாலும் உயர்ந்திருக்கும் திருத்தேர், சூழ்ந்திருக்கும் மக்களின் ஆற்றலுக்கு அறைகூவல்! அம்மம்ம! திருத்தேரின் வடம் பிடித்து இழுப்பதில் எவ்வளவு மகிழ்ச்சி! வாழ்க்கை எய்த்துக் களைத்துப் போகாமல் தடுக்க விழவு! நல்ல முறையில் விழவெடுக்கும் சமுதாயம் விழா வாழ்க்கை பெறும்!
சுகாதார வாழ்வு
வாழ்க்கை வாழ்வதற்கே! உடம்பிற்கு நோய் இயற்கையன்று! செயற்கையே! உடம்பை "நடமாடும் கோயில்" என்று திருமூலர் பாராட்டுவார். உடம்பை இழிந்த தென்று நினைத்து அலட்சியமாக வாழ்கிறவர்கள் நோயை வரவழைத்துக் கொள்கின்றனர்! அதன் பிறகு வேறு வழியின்றி உடம்புக்கு அடிமையாக வாழ்வர்! ஏன் இந்த அவலம்? தூய்மையான காற்று, தூய்மையான தண்ணிர், தூய்மையான உணவு, தூய்மையான் சிந்தனை, இவற்றைக் குறித்த காலத்தில் உடம்புக்கு வழங்கினால் உடம்பு இயங்கும்! நம் விருப்பம்போல் ஒத்துழைக்கும்! திருக்கோயில் வளாகத்தில் அகன்ற மூச்சுக்காற்றுள்கள், உயர்ந்த மதில்கள் சூழ அமைந்திருப்பதால் தூய்மையான தண்ணீருண்டு! இறைவனுக்குப் படைக்கும் காய்களும் கனிகளும் உணவிற் சிறந்தவை! இவற்றை உண்டு வாழ்ந்தால் ஏன் நோய் வருகிறது: திருக்கோயில் தூய்மையாக இருந்தாலும் திருக் கோயிலைச் சார்ந்துள்ள விதிகள் எப்பொழுதாவது தூய்மை கெட்டுப் போயிருந்தால் திருக்கோயில் வளாகமும் கெடும்.