ஆலயங்கள் சமுதாய மையங்கள் 35
வருவதும் உண்டு. சங்க காலத்திலும் புலவர்களுக்கிடையில் யாருடைய கவிதை சிறந்தது என்று கலகம் நடந்தது! பெருமான், புலவர்களுக்கிடையேயிருந்த கலகத்தை அடக்கி நக்கீரர் கபிலர், பரணர் ஆகியோர் பாடல்கள் விழுமியவை என்று ஏற்பளித்தார்.
་கலை வல்லோர் தமிழ் எல்லாம் சித்தங்கொடு தெருட்டுஞ்சிறு வணிகன் தெருள்கீரன் முத்தண்டமிழ் கபிலன்தமிழ் பரணன்தமிழ்மூன்றும் அத்தன்மயுள் அறியும்தொறும் அறியும்தொறும் எல்லாம்"
"பல்காசொடு கடலிற்படு பவளம்சுடர் தாளம் எல்லாம் நிறுத்து அளப்பான் என இயல்வாணிகன் குமரன் சொல்லாழமும் பொருளாழமும் துலை நாவெனத் துரக்க நல்லாறுஅறி புலவோர்களும் நட்டார். இகல் விட்டார்”
எனும் திருவிளையாடற்புராணப் பாடலில் இஃதறியலாம். திருக்கோயில் வளாகத்தில் தமிழோடு இசைப் பாடல் ஒதப்பெற்றது. தமிழாய்வு செய்யப் பெற்றது. ஆக, மானிட இயக்கத்தின் ஊற்றாக இருக்கிற சிந்தனை, கருத்து, இலக்கியம், தத்துவம் ஆகிய அனைத்தும் திருக்கோயில் சூழலிலேயே காணப்பெற்றன; படைக்கப் பெற்றன.
திருக்கோயிலைச் சார்ந்து மொழி உலகம் இருந்த வரையில் தமிழ் மொழி தூய்மையாக இருந்தது. கலப்பின்றி இருந்தது. தனித்து இயங்கியது. தமிழ்மொழி வழியதாகச் சமுதாயத்தின் சிந்தனைப் போக்கு அமைந்திருந்தவரையில் உயிர்ப்புள்ளதாக இருந்தது. திருக்கோயிலைத் தமிழ் வளர்த்தது. தமிழைத் திருக்கோயில் வளர்த்தது.