பக்கம்:ஆலயங்கள் சமுதாய மையங்கள்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆலயங்கள் சமுதாய மையங்கள் தி 37

நிதி

திருக்கோயில் தத்துவத்தில் பொன்னுக்கும் பொருளுக் கும் இடமுண்டு. பொன்னும் பொருளும் வெறுக்கத்தக்கன அல்ல. "முனிவரும் மன்னரும் முன்னுவ பொன்னால் முடியும்” என்பது மாணிக்கவாசகர் திருவாக்கு. ஆதலால், வாழ்க்கைக்குப் பொருள் இன்றி அமையாதது. திருக்கோயில் மற்றவர்களிடமிருந்து பெறவும் செய்தது. அதுபோலவே நாடி வந்தாருக்குத் தான்ும் வழங்கியது. இறைவன், திருவாவடுதுறையில் திருஞானசம்பந்தருக்குப் பொற்கிழி தந்தருளினன்; சுந்தரருக்குச் சித்தவட மடத்தில் பொற்கட்டி தந்தருளினன்; திருவீழி மிழலையில் வறட்சியினால் பாதிக்கப்பட்ட மக்கள் துயர் நீங்க, திருஞான சம்பந்தரும் அப்பரடிகளும் பணி செய்ய, நாள் தோறும் படிக்காசு தந்தருளினன்.

"கால நிலைமை யால்உங்கள்

கருத்தில் வாட்ட முறிர் எனினும் ஏல உம்மை வழிபடுவார்க்

களிக்க அளிக்கின்றோம் என்று கோலம் காண எழுந்தருளிக்

குலவும் பெருமை இருவருக்கும் ஞாலம் அறியப் படிக்காசு

வைத்தார் மிழலை நாயகனார்”

என்பது பெரியபுராணம். ஆதலால், திருக்கோயில் சூழலில் வாழ்தல், வளமான வாழ்க்கையாகவே அமைந்திருந்தது.

மரணத்தை வெல்லல்

வாழ்க்கை, வாழ்வதற்கே! சாவதற்கல்ல! மரணத்தை வென்று வாழ வேண்டும்.