இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஆலயங்கள் சமுதாய மையங்கள் தி 41
லைத் திருக்கோயிலைச் சார்ந்ததாக அமைப்போம்! முன்னையது உடனடியாக நிகழக் கூடியதன்று! தெரிந்த உண்மையே! ஆயினும் பின்னையது - அதாவது சமுதாய வாழ்வியலைத் திருக்கோயிலைச் சேர்ந்ததாக அமைப்பது என்ற கோட்பாட்டை, உடனடியாகத் தொடங்க யாதொரு தடையுமில்லை! இந்த முயற்சியை உடனடியாக மேற்கொள் வோமானால், நம்முடைய தலைமுறையிலேயே திருக் கோயில்கள் மீண்டும் சமுதாய மையங்களாக விளங்கும் பொற்காலம் தோன்றும்! கோயிலைத் தழுவிய குடிகள், குடிகளைத் தழுவிய கோயில்! - இதுவே நெறிமுறை! செயற்பாடு! தவம்! அனைத்தும் ஆம்!