ஆலயங்கள் சமுதாய மையங்கள் $ 45
விண்ணுக்கும் சிறப்பாவது! மானுடம் வென்று வீரம் நிகழ்த்துவது வாழ்க்கையின் குறிக்கோளாகும்.
"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்." என்று திருக்குறள் கூறும். நெறிப்பட நின்று வாழ்தல் ஒரு கலை. வாழ்க்கையென்பது கட்டி முடிக்கப் பெற்ற ஒரு மாளிகையன்று; நாழிகைதோறும் உரியோரால் கட்டப் பெற்று வருவது. வாழ்க்கை ஒரு சுமையன்று துன்பமும் அன்று; வாழ்க்கை குறிக்கோளுடையது. வாழ்க்கை மகிழ்ந்து வாழ்வதற்குரியது. அதனால், கால உணர்வோடு கலந்து வளர்ந்த வாழ்வியற் கலைகள் நமது திருக்கோயில் வளர்ந்த கலைகள்.
வாழ்க்கைக்குச் சோறு மட்டும் போதாது. வாழ்க்கைக் குக் களிப்பும் மகிழ்ச்சியும் தேவை. உயிர் தழைத்து வளர்வ தற்கு இன்பம் துணை செய்கிறது. ஒருவர் நெறிப்பட வாழ்தல் அவருக்கும் பெருமை அவரைச் சார்ந்த மற்றவர்களுக்கும் பயன்தரும். ஒரு நல்ல இசைக்கலைஞன் இனிமையாகப் பாடும் பொழுது அவனுக்கும் பெருமை; மகிழ்ச்சி, இன்பம்! அந்த இசையமுதைத் துய்த்து மகிழும் மற்றவர்களுக்கும் களிப்பு: மகிழ்ச்சி: இன்பம்! ஆதலால் வாழ்க்கைக்குக் கலை இன்றியமையாதது தலைநலம் சான்ற வாழ்க்கையில்தான்் அன்பு இருக்கும்; அமைதி இருக்கும்; இன்பம் இருக்கும்.
வாழ்தல்!-இஃது ஒர் அருமைப்பாடான கலை. "பிழைத்தல்” வாழ்க்கையன்று வாழ்க்கையில் வழங்கப் பெற்றுள்ள வாய்ப்புகள் அனைத்தும் முழுமையாகப் பயன்பட வேண்டும். வாழ்க்கை ஒரு சுமையாக இருத்தல் ஆகாது. எவ்வளவு நெருக்கடியான துன்பச் சூழலிலும் பரித்து மகிழ்ந்து வாழ்தலே வாழ்க்கை! அழுது புலம்புவது அவலம்!