ஆலயங்கள் சமுதாய மையங்கள் இ 55
"ஏழிசையாய் இசைப் பயனாய்
இன்னமுதாய் என்னுடைய தோழனுமாய் யான் செய்யும் துரிசுகளுக்கு உடனாகி மாழை ஒண்கண் பரவையைத் தந்து
ஆண்டானை மதியில்லா ஏழையேன் பிரிந்திருக்கேன்
என்ஆரூர் இறைவனையே!”
என்ற திறப்பாடலில் சுந்தரமூர்த்தி நாயனார் இறைவனே "இசையின் பயன்” என்கிறார். இன்ப அன்பு அடைதலே இசையின் பயன். மாணிக்கவாசகரிடம், அவர்தம் பாட்டுடைப் பொருள் எது? - எனக் கேட்ட பொழுது, அம்பலத்திலாடும் ஆடல் வல்லானை மாணிக்கவாசகர் காட்டியதாக ஒரு வரலாறு உண்டு. ஆதலால் கலையின் பயன் சாதாரணக் களிப்பு மட்டு மன்று. களிப்பினும் உயர்ந்த இன்பமாகும். திருவருளின்பத்தில் திளைத்தலாகும்; திருவருளின் பத்தில் ஒன்றுவதாகும்.
நமது புலன்கள் அடங்காத் தன்மையன. பொறிகள் மதம்பிடித்த களிறுகள் போல்வன. இவற்றை அடக்கி நெறிப்படுத்தும் ஆற்றல் திருமுறைப் பண்ணிசைக்கு உண்டு அலையும் ஆன்மாவை, பெருமான் திருவடிப் போதில் கட்டிப்போடும் ஆற்றல் திருமுறை இசைக்கு உண்டு. இறைவனே ஆரூரரின் இசைத் தமிழில் ஒன்றிப்போய் அவன் தன் கடமையைக் கூட மறந்துவிட்டானே!
வன்தொண்டன்با هم به هم
ஒன்றும் உணர்வால் நமைப் போற்றி