பக்கம்:ஆலயங்கள் சமுதாய மையங்கள்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 தி குன்றக்குடி அடிகளார்

உரைசேர் பதிகம் பாடுதலால்

நின்று கேட்டு வரத்தாழ்த்தோம் என்றார் அவரை நினைப்பிப்பார்”

என்று சேக்கிழார் பெருமான் இச்செய்தியை எடுத்துரைப் பார். ஆதலால், இசையின் பயன் கட்டறுத்தல்; அன்பில் தோய்தல்; திருவருள் நலத்தினைப் பெறுதல்.

ஓர் ஆன்மா திருக்கோயிலைத் தழுவியுள்ள கலையால், எப்படி வளர்கிறது, பயன் பெறுகிறது என்பதற்கு இஃதோர் எடுத்துக்காட்டு.

கூத்தில் பிறந்து, இசையில் வளர்ந்து நிறைவு பெற்று விளங்குவது. இயற்றமிழ். இயற்கை எப்பொழுதும் இன்பமாக இருப்பது. பதிகங்கள், இசைப்பாக்கள், பரிபாடல் முதலியன கூத்தும் இசையும் முதிர்ந்த இயற்றமிழாகும். இயற்றமிழ், கலை நிறைந்த வடிவத்தில் உணர்வைத் தொடுவது; செழுமைப் படுத்துவது. இயற்றமிழ் இதயத்திற்கு இதமளிப்பது களிப்புத் தருவது. இயற்றமிழே மக்கள் முன்னேற்றத்திற்கு உந்து சக்தியாக விளங்குவது, அதனால் இயற்றமிழ் விரித்துரைக்கும் நிகழ்வுகள் திருக்கோயில்தோறும் நிகழ்ந்துள்ளன; ஆங்கு பட்டி மண்ட்பங்கள் நடந்துள்ளன. இறைவனும் இறைவியும் இயற்றமிழ் ஆராயும் தமிழ்ச் சங்கங்களில் வந்தமர்ந்தனர்; தமிழை ஆய்ந்தனர் இறைவன் "நன் பாட்டுப் புலவனாய்ச் சங்கமேறினான்" பாடலும் இயற்றினான். இறைவன் நாட்டு மக்களின் வாழ்க்கை நயந்தினிது நடைபெற அகப்பொருள் இலக்கணமும் அருளிச் செய்தனன். எனவே, இயற்கையோடி

சைந்தது வாழ்க்கை. வாழ்க்கையோடு இசைந்தது சமயம். -

சமயமும் கலையும் ஒன்றையொன்று தழுவியன. எல்லாம் மானுடகுலத்தை வளப்படுத்தவேயாம்.

-