ஆலயங்கள் சமுதாய மையங்கள் இ 57
சமய வாழ்க்கையின் மணிமுடியான நிலை உள்ளக் கிழியில் உருவெழுதுதல்; உற்று நோக்குதல்.
"உயிரா வணமிருந்து உற்றுநோக்கி
உள்ளக் கிழியின் உருவெழுதி உயிராவணம் செய்திட் டுன்கைத் தந்தால் உணரப் படுவாரோடு ஒட்டி வாழ்தி அயிரா வணமேறா தான்ே றேறி
அமரர் நா டாளாதே ஆரு ராண்ட அயிரா வணமேயென் னம்மா னேநின்
அருட்கண்ணால் நோக்காதார் அல்லாதாரே!”
என்றருளிச் செய்வார். அப்பரடிகள். ஞானக் காட்சியில் ஒன்றைக் காணுதல் அரிய தவத்தின் பயன். அங்ங்ணம் கண்ட ஒன்றினைத் தொடர்ந்து நினைந்து நினைந்து மகிழ, உள்ளக் கிழியில் உருவெழுதுதல் சமயக் கலையின்-ஒவியக் கலையின்-சிற்பக் கலையின் தாய்மை நிலை. ஓர் உருவமும் ஒரு நாமமும் இல்லாதான்ை, உணர்வரிய மெய்ஞ் ஞானத்தில் கண்ட காட்சியே முதல் 1 அக்காட்சியின் அனுபவமே வழிபாடு! வழிபாட்டினை அனைவரும் அனுபவித்து மகிழவே சிற்பம்; திருவுருவ வழிபாடு! மலையெல்லாம் குகை! குகையெல்லாம் திருக்கோயில்: மனம், வாக்குக் கடந்த பரம்பொருள், பேசும் பொற் சித்திரமாக, அருளும் திருமேனியாக எழுந்தருளியுள்ள காட்சி! தமிழகத்தில் உள்ள கோயில்கள் சிற்பக் களஞ்சியங்கள்! கல்லுக்கு உயிர் கொடுத்துப் பேச வைக்கும் கலையில் தமிழச் சிற்பக் கலைஞர்கள் விஞ்சிய புகழுடையவர்கள். ஊழி தோறும் சாதாரண மக்கள் கூடக் கடவுளைக் கண்டு மகிழத்தக்க வகையில் சிற்பத்தில் சிந்தைக்கினிய மாட்சிமையைத் தந்தமைக்கு கைம்மாறு ஏது: தமிழகத் திருக்கோயில்கள் இயல்பான-வாழ்க்கையோடி