58 ஜீ குன்றக்குடி அடிகளார்
யைந்த அனைத்து உணர்வுகளும் ததும்பும் சிற்பங்களைக் கொண்டு அழகுற விளங்குகின்றன. தமிழகத் திருக் கோயில்களின் சிற்பங்கள் கண்ணுக்கு விருந்து அளிப்பன: சிந்தைக்குக் களிப்பு நல்குவன: எண்ணுதற்குக் கற்பனைக் களஞ்சியமாய் விளங்குவன. இதனினும் உயிர்ப்புள்ள கலைவேறு ஏது:
தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் 80 காரணங் களைச் சிவன் அபிநயித்துக் காட்டுவதாகச் சிற்பத்தில் செதுக்கப்பட்டுள்ளன. பரதமுனி இயற்றிய நாட்டிய நூலில் கண்டுள்ள காரணங்களோடு இவை ஒத்திருக்கின்றன.
தஞ்சைப் பெருவுடையார் கோயிலைப் போலவேஆனால், தந்தை, மகன் என்ற மரபுக்கேற்ற உயரத்திலும் அளவிலும் சற்றுச் சிறியதாகக் கங்கை கொண்ட சோழபுரம் திருக்கோயில் கட்டப் பெற்றுள்ளது. இத்திருக்கோயிலில் உள்ள சிற்பங்களும் உயர்ந்து விளங்குபவை. இங்குள்ள சிற்பங்கள் உயிர்ப்புள்ள உருவங்களாக- நம்முடன் பேசுவன போன்று அமைந்துள்ளவை. கங்கைகொண்ட சோழபுரம் திருக்கோயிலில் இறைவன், சண்டேசுவர நாயனாருக்குச் சண்டீசபதம் அருளும் காட்சி மிகச் சிறந்த அழகிய சிற்பமாகச் செதுக்கப் பெற்றுள்ளது. அடுத்து நம்முடைய கவனத்தைக் கவரும் சிறந்த சிற்பங்கள் உடைய திருக்கோயில், தாராசுரத்திலுள்ள இராசராசேசுவரம் என்ற திருக்கோயில், இந்தத் திருக்கோயிலில் அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாறு முழுவதும் சிற்பமாகச் செதுக்கப் பெற்றுள்ள காட்சி, காண்பார் உள்ளத்தைக் கவரும் காட்சி! இங்ங்ணம் தமிழ்நாட்டுத் திருக்கோயில்களில் அமைந்துள்ள சிற்பங்கள். கலைகளின் கருவூலமாக மட்டுமல்லாமல், தமிழக