80 ஜி. குன்றக்குடி அடிகளார்
நல்இல்” என்று அகநானூறும், "ஒவுக் கண்டன்ன இல்” என்று நற்றிணையும் கூறும். ஆதலால் சங்க காலத்திலேயே ஓவியக் கலை தமிழகத்தில் சிறந்திருந்தது என்பதை அறியலாம். ஓவியமும் நுண்கலைகள் வரிசையைச் சேர்ந்தது. திருக் கோயில் முழுதும் தூய்மையாகவும் அழகாகவும் எடுப் பாகவும் விளங்க வண்ணப்பூச்சு செய்யப் பெற்றது. தஞ்சைப் பெருவுடையார் திருக்கோயிலில் உட்புறச் சுவரில் நாயன் மார்கள் வரலாறு, ஒவியமாய் வரையப் பெற்றுள்ளது. சுந்தர மூர்த்தி நாயனார், சேரமான் பெருமாள் நாயனார் வரலாற்றை விரிவாகச் சித்திரித்துக் காட்டும் வண்ண ஒவியங்கள் மிகச் சிறப்பாகவும் அழகாகவும் அமைந்துள்ளன. சிவன்-பார்வதி முன்னிலையில் தேவமாதர்கள் நடனமாடு கின்றனர். இரண்டு நாயன்மார்களும் அதைக் கண்டு களித்த வண்ணம் உள்ளனர். இந்தத் திருக்கோயிலில் உள்ள ஓவியங்களிலெல்லாம் சிறந்த ஓவியம் திரிபுராந்தகச் சிவன் கதையைச் சித்திரித்துக் காட்டும் ஓவியமே! திரிபுராந்தகச் சிவனுருவத்தில் ரெளத்திரம், வீரம், கருணை முதலிய மெய்ப்பாடுகள் அற்புதமாகத் தீட்டப் பெற்றுள்ளன. இந்த ஓவியங்களுக்குப் பயன்படுத்தப் பட்டிருக்கும் வண்ணக் கலவை மிகமிக உயர்ந்தது. இன்றும் இந்த ஒவியங்கள் உயிரும் அழகும் நிரம்பியவையாக விளங்குகின்றன. ஒவியத்திற் சிறந்து விளங்கும் இந்தத் திருவுருவங்கள் பக்தர்களிடத்தில் சிறந்த பத்திமை உணர்ச்சியை ஏற்படுத்துகின்றன என்பது வெள்ளிடைமலை. ஒவியத்திற்கும் ஆடற் கலைக்கும் தஞ்சைப் பெருவுடையார் திருக்கோயில் கருவறையைச் சார்ந்த அந்த உட்சுவரே தாயேடு: சித்தன்னவாசல் வண்ண ஒவியங்களும் நினைவு கூரத்தக்கவை. தமிழகத்தின் பல்வேறு திருக்கோயில்களில் அருளார்ந்த நாயன்மார்கள் மற்றும்