64 இ குன்றக்குடி அடிகளார்
அங்கு வளர்ந்த குழநதை திருஞான சம்பந்தர். திருக்கோயில் வழங்கும் உயிர்ப்புள்ள வாழ்வியற் கலைக்கு இதைவிடச் சிறந்த சான்று வேறு வேண்டுமோ?
மானுட வாழ்க்கை அகனமர்ந்த காதலில் மலர்வது; மகிழ்வது. இறைவனே உமையொடு காதல்புரிந்து பெண்பால் உகந்து வாழ்கின்றான்.
"தென்பால் உகந்தாடும் தில்லைச் சிற்றம்பலவன் பெண்பால் உகந்தான்் பெரும்பித்தன் காணேடீ பெண்பால் உகந்திலனேல் பேதாய் இருநிலத்தோர் விண்பாலி யோகெய்தி விடுவர்காண் சாழலோ"
என்பார் மாணிக்க வாசகர். ஆதலால் காதலின் அருமை திருக்கோயில் உள்ளிருக்கும் சிவன் தனக்குத் தெரிகிறது. ஆதலால், தாம் விரும்பிய ஒருவரை செட்டிப் பெண் மணந்து கொள்ள, திருமருகலுறை எம் தலைவன், திருஞானசம்பந்தர் வாயிலாகத் துணை செய்த அருமைப் பாடு எண்ணி எண்ணி இன்புறத்தக்கது. நற்றமிழ்ச் சுந்தரர் காதல் நிறைவுறு வதற்காகப் பரவையார் பாலும், சங்கிலியார் பாலும் இறைவன். நடந்த தூது மண்ணகம் மணக்கும் வரலாறு அன்றோ! காதல் இயல்பில் அரும்பி மலர்வது. அதையும் யாராவது செயற்கையாக்க விரும்பினால் கண்ணுதற் பெருமானின் நெற்றிக்கண் கனல்கக்கும். இதற்குச் சான்று காமனை எரித்தது. ஆதலால் ஓரறிவுயிரிலிருந்து ஆறறிவுயிர் வரை கலந்து மகிழும் காதலுக்கும் திருக்கோயிலே மையம்.
வாழ்வு, வாழும் தன்மையுடையது. ஒரோவழி இயற்கையின் காரணமாக வாழ்விக்க நேரிடலாம். உண்ணும் உணவுக்கும் நெருக்கடி ஏற்படலாம். அதைத்தான்் பஞ்சம்