72 ; குன்றக்குடி அடிகளார்
வணங்கும் திருவுருவங்கள் அனைத்தும் வாழ்வியற் கலையைச் சார்ந்த அறிவியலின் வெளிப்பாடேயாம். ஒவ்வொரு திருக்கோயில் கருவறையிலும் எழுந்தருளி யிருப்பது சிவலிங்கத் திருமேனி. இதற்குப் பலவேறு பொருள் காணலாம். விரிவஞ்சி ஒன்றிரண்டு காட்டுகிறோம். உலகே இறைவன்; இறைவனே உலகு. இந்த உலகு உருண்டை என்பது பண்டைத் தமிழரின் தெளிவான முடிவு. "அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்” என்று அற நூல்கள் கூறும். உலகையே இறைவனாக நினைந்து வழிபடத் தொடங்கிய காலத்தில், உலக வடிவத்தில் பாணமும் அதனைத் தாங்கி நிற்கும் ஆற்றலாக ஆவுடையும் என்று கருதி வழிபாடு செய்யப் பெற்றது. தொன்மைக் கால மக்கள் தீயினையே வழிபட்டு வந்திருக்கின்றனர். "சோதியே, சுடரே! சூறொளி விளக்கே!" என்று திருவாசகம் கூறும். கடவுட் காட்சியில் முதற்காட்சி சோதிதான்்! எரிகின்ற எந்தப் பெருஞ் சோதி நெருப்பும் அடிப்பகுதி அகன்றும், நுனிப்பகுதி குறுகியும் இருக்கும் இது இயற்கை நியதி. இங்கனம் பாணம் குறுகி எழும் சோதியாகவும் ஆவுடை அச்சோதியின் அடிப் பாகமாகவும் கண்டு வழிபாடு செய்யப் பெற்றது. அறிவியல் உலகில், பொருளையும் ஆற்றலையும் ஒன்றாகக் கிடந்து, செயற்படும் பொருளையும் பொருளின் ஆற்றலையும் பிரித்துத் தனித்தனியே பெயர் சூட்டி அழைக்கும் பழக்கம் வளர்ந்து வருகிறது. சிவம் பொருள்; அகப்பொருளின் ஆற்றல் சக்தி. சக்தியாய், சிவமாய் ஒருங்கிணைந்து நின்றிடும் திருமேனி சிவலிங்கத் திருமேனி. இங்ங்ணம் வாழ்வோடு பொருந்திய கலை ஞானத்தின் மறு பதிப்புக்களே திருக்கோயில் திருவுருவுங்கள்.