பக்கம்:ஆலயங்கள் சமுதாய மையங்கள்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆலயங்கள் சமுதாய மையங்கள் ஜி. 77

பொதுவாக வடபுலத்து மக்களுக்கும், சமஸ்கிருதம் தங்களதென்றே போலி உரிமை கொண்டாடும் பார்ப்ப னருக்கும் ஆகமங்கள் அறிமுகமும் தொடர்பும் இல்லை; இவர்கள் இன்றளவும் கூட ஆகம வழிபாடுகளுக்கு உடன் படுவதில்லை என்பதே உண்மை. இன்றுள்ள சம்ஸ்கிருத மறைகளில் "சிவமே கடவுள்" என்று தெளிவாக உறுதிப் படுத்தப் பெறவில்லை. மேலும் "சிவபெருமானுக்கு உரிய மொழி சம்ஸ்கிருதம், அதனால் சிவாகமங்கள் சம்ஸ்கிருத மொழியில் அருளிச் செய்யப் பெற்றன”-என்று கூறுவது பொருளற்றது.

இறைவன் ஒரு மொழிக்கேயுரியவன் என்பது இறைவ னுடைய குறைவிலா நிறைவுத் தன்மைக்குக் குறை கற்பிப்ப தாகும். இறைவனுக்கு எல்லா மொழிகளும் உரிமை யுடையன. இன்னும் சொல்லப் போனால் தத்துவ அடிப் படையில் எல்லா ஒசை ஒலிகளுக்கும் மூலம்-நாதத் தத்துவம். இந்த நாதத் தத்துவத்தையும் கடந்த விழுப்பொருள் சிவம். அதனால் சிவத்திற்கு உரிய மொழியென்றும், விருப்பமான மொழியென்றும் ஒன்றும் இல்லை. ஆதலால் இறைவனுக்கு ஒரு மொழி சார்பு கூறுதல் நன்றன்று. இறைவன் திருவருள், நிகழ்ச்சிகள் அனைத்தும் உணர்த்துதலேயாம். அத்திருவருள் உணர்த்திய உணர்வை உய்ந்து உணர்ந்த நிறைமொழி மாந்தர்கள், அதனை மொழிகளில் வெளிப்படுத்தித் தந்தருள்வர். இதனையும் விஞ்சி, பரசிவத்துக்கு மொழி உண்டெனத் துணிந்து ஆராய்ப்புகின், பரசிவத்தின் மொழி தமிழேயாம்! இவ்வாறு தமிழே என்று துணிய, சான்றுகள் பல உள்ளன. சீகாழியில் திருஞானசம்பந்தர் அழ, பெருமானின் திருக்குறிப்பின் வழி, பெருமாட்டியார் திருமுலைப்பால் சுரந்து சிவ ஞானத்தைக் குழைத்து