ஆலயங்கள் சமுதாய மையங்கள் 彌 79
சிவாகமங்கள் சிவபெருமானாலேயே அருளிச் செய்யப் பெற்றன என்ற கருத்தில் ஒரளவு உண்மையிருக்கிறது. சதாசிவ மூர்த்தி, கெளசியர், காசிபர், பாரத்வாசர், கெளதமர், அகத்தியர் ஆகியோர் ஐவருக்கும் சிவாகம நெறி உணர்த்தி னார். பின் பல நூற்றாண்டுகள் அவை வழிவழி "எழுதாக் கிளவி'யாகவே விளங்கி கி. பி. 5-ஆம் நூற்றாண்டு அளவில் தான்் வரிவடிவத்தைப் பெற்றன என்பது மொழி வரலாற்றறிஞர்கள் சொல்லும் கருத்து.'
ஆகமங்கள் அனைத்தும் ஒரே சமயத்தில் எழுதப் பெற்றன என்று கருதுதற்கும் இடமில்லை. ஆகமங்களில் முன்னுக்குப் பின் முரணிருக்கிறது. அதனாலேயே, பல்வேறு காலங்களில் ஆகமங்கள் எழுதப் பெற்றிருக்கவேண்டும் என்று கருத வேண்டியிருக்கிறது. யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலரும் ஆகமங்களில் முரணிருப்பதை எடுத்துக் காட்டு கிறார்". ஆதலால் ஆகமங்கள் இன்றுள்ள வடிவத்திலேயே சிவபெருமானால் அருளிச் செய்யப் பெற்றவை யென்பதும், அவை ஒரே காலத்தில் தோன்றியன என்பதும், என்றும் - ஒரே படித்தனவாக இருந்தன என்பதும் ஏற்றுக்கொள்ளப் பெற இயலாதன. திரிலோகசந்த சிவாசாரியார் இயற்றிய "சித்தாந்த சாராவளி"யின் உரையாசிரியர் அநந்த சிவாசாரி யார் ஆகமங்கள் பற்றி கூறியுள்ள கருத்து." கவனத்திற்குரியது. எனினும் சிவாகமங்கள் கொள்ளத்தக்கன அல்ல என்பது முடிவன்று. நாம் சிவாகமங்களை ஏற்புழி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான்் நமது கொள்கை, சிவாகம வழியில் திருக்கோயில் கால பூசைகள், திருவிழாக்கள், பெருஞ்சாந்தி விழா என்று போற்றப் பெறுகின்ற கும்பாபிடேகங்கள் முதலியன செய்தல் ஏற்படுடையனவேயாம். ஆயினும் சதாசிவ மூர்த்தத்தினால் உபதேசிக்கப் பெற்ற சிவாகமங்