ஆலயங்கள் சமுதாய மையங்கள் இ 83
பிறப்பிலேயே சிவாச்சாரியார்களாகிறார்கள் என்கிற செய்தி ஏற்றுக்கொள்ளத்தக்கதன்று.
ஏழு வயதில் சமய தீக்கை பெற்று, சிவாகமங்களை முறையாகக் கற்கத் தொடங்கி, விசேட தீக்கை, நிர்வான தீக்கை, ஆச்சாரியபிடேகம் முதலியவற்றை உரிய-அந்தந்த வயதுகளில் பெற்று, பெற்ற தீக்கைகளுக்கு ஏற்றவாறு, ஒழுகி, முறைப்படி தகுதி பெற்றவர்களே சிவாச்சாரியார்களா கிறார்கள். சிவாகம முறைப்படி ஒரு தீக்கைக்கும் பிறிதொரு தீக்கைக்குமிடையில் பன்னிரண்டு ஆண்டுகள் கடந்துவிடக் கூடாது என்ற நியதி இருக்கிறது.
திருக்கோயில் வழிபாட்டில் ஆன்மார்த்தம், பரார்த்தம் என்று இரண்டு பூசைகள் உள்ளன. ஆன்மார்த்தம், பரார்த்தம் என்ற பூசைகள் இரண்டும் திருக்கோயிலில் எழுந்தருளி யிருக்கும் மூர்த்தியிடத்தில் செய்யப் பெறுவனவேயாம். பூசை செய்யும் இடத்திலும் மூர்த்தியிலும் வேறுபாடில்லை. செய்யும் நோக்கத்தைப் பொறுத்தே ஆன்மார்த்தம் பரார்த்தம் என்று வேறுபடுகின்றன. சிவாச்சாரியார்கள் திருக்கோயி லுக்குள் எழுந்தருளியிருக்கும் மூர்த்தியை ஆன்மார்த்த மாகவும் வழிபடலாம். ஆன்மார்த்தமாக வழிபாடு செய்து கொள்ள இயலாதவர்களுக்காகவும் பொதுவாக எல்லா உயிர்களுக்காகவும் வழிபாடு செய்துவைக்கும் உரிமையுடை யவர்கள் சிவாச்சாரியார்கள். இதுவே பரார்த்த இசை எனப் பெறும்.
சைவ முறைப்படி பரார்த்த மூர்த்தியைத் தீண்டுதற் குரிய தகுதி தருவதாகிய தீக்கை முதலியன முறையாகப் பெற்றவர்கள், திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் மூர்த்தியை ஆன்மார்த்தமாக வழிபாடு செய்து கொள்ளலாம். இதுதான்் தமிழகத்துத் திருக்கோயில் வழிபாட்டுப் பழைய