ஆலயங்கள் சமுதாய மையங்கள் தி 85
திருச்சாத்தமங்கையில் பதிகம் பெற்ற அயவந்தீச்சுரத்தில் எழுந்தருளியுள்ள இறைவனுக்குத் திருமுழுக்குச் செய்தும் திருவமுது செய்வித்தும் வழிபாடு செய்து கொண்டமையை பெரிய புராணம் கூறுகிறது."
அடுத்து, வேளாளர் குடியைச் சேர்ந்த அரிவாட்டாய நாயனார் நாள்தோறும் திருக்கோயிலுக்குள் எழுந்தருளி யுள்ள பெருமானுக்குச் செந்நெல் அரிசித் திருவமுதும், மாவடுவும், செங்கீரையும் எடுத்துச் சென்று திருவமுது செய்விக்கும் கடப்பாட்டினை யுடையராயிருந்தனர் என்றும் பெரியபுராணம் கூறுகிறது."
அடுத்து, திருஞான சம்பந்தர் தாம் குறிப்பிட்ட பயன் எனக்கண்டு வீழ்ந்து வணங்கிய கண்ணப்பர் வரலாறு, தக்க சான்று. கண்ணப்பர் வரலாற்றை “அதி தீவிரமான வல்வினையின் பாற்பட்டதென்றும், அதனால் அது பொது விதியன்று" என்றும் சிலர் கூறுவர். அது உண்மையன்று. கண்ணப்பர்க்கு வழிபடுதலுக்குரிய வாய்ப்புக் கிடைத்ததால் பெருமானே திருக்கண் நோக்கால் தீக்கை நயனதிக்கை) செய்து வைக்கும்’ பெரும்பேறு பெற்றார். பிறகு வழிபாட்டின் பயனாகப் பெருகிய அன்பில் அவர் அதி தீவிரமானார். நாம் அவருக்குத் தடையின்றி வழிபடக் கிடைத்த வாய்ப்பையே இங்கு எடுத்துக்காட்ட விரும்பு' கின்றோம். கண்ணப்பர் திருக்கோயிலுக்குள் சென்று, திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள காளத்தியப்பரைத் தழுவி உச்சி மோந்தார். இந்த வாய்ப்பு அவருக்குக் கிடைக்காது போயிருக்குமாயின், அவரை "கண்ணப்பராகக் கண்டிருக்க இயலாது. திருக்காளத்திக் கோயிலில் சிவகோசரியார் என்னும் சிவாச்சாரியார் ஆகம விதிப்படி பூசை செய்தார்