பக்கம்:ஆலயங்கள் சமுதாய மையங்கள்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86. இ. குன்றக்குடி அடிகளார்

என்றும் சேக்கிழார் கூறுகிறார்." ஆனாலும், மற்றவர்கள் திருக்கோயிலுக்கு வந்து பூசனை செய்து கொள்வதற்குத் தடையில்லாதிருந்திருக்கிறது. மறுநாள் சிவகோசரியார் வந்து வருந்தும்பொழுது கூட, பூசனை செய்தவர் யார்? என்ற கேள்வி எழவில்லை. மற்றவர் பூசை செய்வதற்குரிய உரிமை யில்லாதிருக்குமாயின் சிவகோசரியார், பூசை செய்தவர் யார் என்று வினவித் தெரிந்து கொண்டிருப்பார். "இந்த அனுசிதம் கெட்டேன் யார் செய்தார்' என்று மட்டும் கேட்டதால் மற்றவர் பூசை செய்வதற்குரிய உரிமை இருந்தது என்பது புலனாகிறது. சிவகோசரியார் தாம் பூசனை செய்வதற்கு முன்பு, இறைவர் திருமுன்பு ஏற்பட்டிருந்தது பழுதுக்குத்தான்் (புலால், எலும்பு கிடந்தமைக்குத்தான்்) பவித்திர பூசை செய்தாரே தவிர, மற்றவர் தீண்டியதற்குரிய பிராயச்சித்தம் செய்ததாகப் பெரிய புராணத்தில் இல்லை. முடிவாக "விதிமுறைப்படி செய்யப்பெற்ற சிவகோசரியார் பூசையை விட, கண்ணப்பர் பூசை சிறப்புடையது, உவப்புடையது, நனிசிறந்தது' என்று காளத்தியப்பர் அருளிச் செய்தமையை எண்ணிப் பார்த்தல் வேண்டும். ஆதலால் சிவாச்சாரியார்கள் திருக்கோயிலுக்குள் எழுந்தருளியிருக்கும் பெருமானை ஆன்மார்த்தமாகவும் வழிபடலாம்; பரார்த்தமாகவும் மற்றவர்களுக்குச் செய்விக்கலாம். திருக்கோயிலில் நாள் பூசையைச் சிவாச்சாரியார்கள் செய்து வைத்து, ஆன்மார்த்த மாக வழிபட வருபவர்களுக்கு வழிபாடு செய்து கொள்ளத் தக்கவாறு வைத்தலே, சிவாச்சாரியார்களுடைய கடமை. இக்கருத்தினைத் திருக்கோயிலுக்கு அமைந்துள்ள தல புராணங்களும் வலியுறுத்துகின்றன. இராமன் பூசித்த திருத்தலங்கள் "திருஉசாத்தான்ம்" முதலிய பல; பாண்டவர் ஐவர் பூசித்தவை "திருமண்ணிப் படிக்கரை முதலிய பல;