88 இ. குன்றக்குடி அடிகளார்
நான்கு வகை வழிபாடுகள் செய்வதற்கும் உரிமை பெற்றவர்களாவர்.
4. முறையாகத் தீக்கை முதலியன பெற்ற சிவாச்சாரி யார்கள் திருக்கோயிலில் ஆன்மார்த்த பூசையும் பரார்த்த பூசையும் செய்வதற்கு உரிமையுடையவர்கள்.
5. சைவ சமய தீக்கைகள் பெற்றவர்கள் அனைவரும் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கிற மூர்த்தியை ஆன்மார்த்தமாக வழிபாடு செய்து கொள்வதற்கு உரிமையுடையவர்கள்.
6. பரார்த்தம் என்பதற்கு "பிறர் பொருட்டு” என்பது பொருளாயினும் பிறருக்காக சிவாச்சாரியாரே செய்தல் என்பது ஒரோ வழி ஏற்புடையதே தவிர, முழுமையானதன்று. திருக்கோயிலின் காலப்பூசை களை முறையாக சிவாச்சாரியார்கள் செய்து, தகுதி யுடையவர்கள் வந்து ஆன்மார்த்த பூசை செய்வதற்கு உடனாக இருந்து துணை செய்வது என்பதே பொருள். ஒரோவழி அங்ங்ணம் ஆன்மார்த்த பூசையாகச் செய்து கொள்ள இயலாதவர்களுக்காகவும் இவர்கள் செய்து வைக்கலாம். வரலாற்றுச் செய்திகளுக்கும் சிவாக மத்திற்கும் திருமுறைகளுக்கும் ஒத்த நடைமுறைக் கிசைந்த உண்மை இதுவே.
7. இம்முறை, நடைமுறைப்படுத்தப் பெறுவதால் பிறப்பினால் சாதி முறை இல்லாமல் போகிறது. தகுதியால், ஆசாரத்தால், சீலத்தால் மட்டுமே வேற்றுமையிருக்கும்.
8. இம்முறையை நடைமுறைப் படுத்துவதன் மூலம், ஒவ்வொரு திருக்கோயிலிலும் எழுத்தருளியிருக்கும்