ஆலயங்கள் சமுதாய மையங்கள் இ 89
இறைவனை, ஆன்மார்த்த நாயகனாகக் கொண்டு வழிபடுவோர் பட்டியல் உருவாகும். அது திருக் கோயில் வளர்ச்சிக்கும் துணை செய்யும். தகுதியும் விருப்பமும் உடையவர்கள், வழிபாடு செய்து கொள்வதற்கு வாய்ப்பிருப்பதால், அவர்கள் பத்திமை யிலும் ஞானத்திலும் சிறந்து வளர்வர். இதுவே இன்றைக்குச் சரியான முறை என்று கருதுகிறோம்.
9. அல்லது அரசு தீவிரமாக மாற்றங்கள் செய்ய விரும்புமாயின் அது பற்றியும் ஆலோசிக்கலாம். ஆனாலும் ஒரு சமயச் சார்பற்ற அரசு, ஒரு சமயத்தில் நேரிடையாகச் சீர்திருத்தம் செய்யப்புகுவது வரவேற்கத் தக்க தன்று. நல்லூழி இன்மையின் காரண மாக, நம் சமயத் தலைவர்கள் தம்முள் மாறுபாடு கொண்டும் ஒத்துணர்வில்லாமலும் இருப்பதாலும் திருக்கோயில் பேணல், சமய நெறிபேணல், புதுமை நெறி காணல் ஆகியன பற்றி ஒருங்கிணைந்து சிந்திக்காததாலும், சிந்தித்து வழி நடக்காததாலும் காலத்தின் தேவைகள் நெருக்குவதால் முறையான வழி காட்டுதலின்றிச் சமுதாயம் தன் போக்கில் செல்கிறது. அரசு அதற்கேற்றவாறு சமுதாயத் தேவைகளை நிறைவு செய்யவும், சீர்திருத்தங்களைச் செய்யவும் அவாவுகிறது. அரசு நம்முடைய சமயத் தலைவர் களையும் சமய அறிஞர்களையும் கொண்ட தக்க மாநாடுகளைக் கூட்டி, நன்றாகச் சிந்தித்து முறையாகச் சீர்திருத்தம் செய்வது வரவேற்கத்தக்கது; ஏற்புடை யதும் ஆம். -
தமிழகத் திருக்கோயில்களில் காலத்திற்குத் தேவை யான மாறுதல்கள் ஏற்பட்டு வந்துள்ளதைத் திருக்கோயில்