பக்கம்:ஆலைக் கரும்பு.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 ஆலக் கரும்பு அந்த ஊரார் பயம் நீங்கியது. காட்டாண்மைக் காரரை வாழ்த்தினர்கள். அவரோ, "என்னே வாழ்த்து வது தகாது. இந்தப் பயத்தை நீக்கிய அந்த எசமானராகிய வள்ளலே வாழ்த்துங்கள்" என்ருர், திருடர்களுடைய கதைகளில் இப்படி வழங்கும் வரலாறுகள் பலவற்றை நாம் கேட்டிருக்கிருேம் கொள்ளே அடிக்கிறவனைலும் சிலரிடம் பயப்படுவது உண்டு. இப்போது வேறு ஒரு நிகழ்ச்சியைப் பார்க்கலாம். 女 பமலோகம்: யமதர்மராஜன் தன்னுடைய சிங்கா தனத்தில் வீற்றிருக்கிருன். அருகில் சித்திரகுப்தன் கணக்குச் சுருணையுடன் மிகவும் சுறுசுறுப்பாகக் கணக்கு எழுதிக் கொண்டிருக்கிருன் அன்று அன்று யார் யாருடைய உயிரைக் கொண்டுவரவேண்டும், எங்கெங்கே கொண்டு போக வேண்டும், என்ன என்ன தண்டனை தரவேண்டும் என்ற கணக்குகளைக் கவனித்துக் கொண்டிருக்கிருன். யம னுடைய ஏவலாளர்களில் தலைவர்கள் சிலர். காலன் என் பவன் ஒரு தலைவன். உயிரின் தகுதிக்கு ஏற்றபடி சில சமயங்களில் கால தூதர் போவார்கள். சில சமயங்களில் யமனுடைய அருகில் உள்ள தூதர்கள் போவார்கள். வேறு சில சமயங்களில் காலனும் போவான். யமராஜனே மிக மிகப் பெரிய உயிரானல் கொண்டுவரப் போவதுண்டு. அன்றைக்குக் கால தூதர்கள் கொண்டு வரவேண்டிய உயிர்களின் பட்டியல்களைச் சித்திரகுப்தன் சித்தம் பண்ணினன். யாரோ ஒருவன் அன்று இறக்கவேண்டிய வன். அவனிடம் ஒரு கால தூதுவனே அனுப்ப ஏற்பாடாகி இருந்தது. அவனுடைய புண்ணிய பாவக் கணக்கு எழுதிய ஒலையைத் தனியே எடுத்து வைத்திருந்தான் சித்திர குப்தன். மேற்கொண்டு காரியங்களே நடத்த வேண்டும் அல்லவா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆலைக்_கரும்பு.pdf/28&oldid=744390" இலிருந்து மீள்விக்கப்பட்டது