பக்கம்:ஆலைக் கரும்பு.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பக்தருக்கு வாய்த்த பயன் 47 சேக்கிழார் திருத்தொண்டர்களின் வரலாற்றைப் பாடித் தொண்டர் சீர் பரவுவார் என்ற சிறப்பைப் பெற்ருர், அறுபத்து மூன்று நாயன்மார்களும் வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு இடத்தில் வாழ்ந்தவர்கள். அந்த அடியார்களின் பொது இயல்பைத் திருக்கூட்டச் சிறப்பு என்ற பகுதியில் சேக்கிழார் தொகுத்துத் தருகிருர், அவர்கள் யாவரும் ஜீவன் முக்த நிலையில் உள்ள வர்கள். அவர்களுக்கு லாப நஷ்டம் இல்லை. ஒடானலும் பொன்னுைலும் ஒன்ருகவே பார்க்கும் சமதரிசனம் படைத்தவர்கள். 'கேடும் ஆக்கமும் கெட்ட திருவினுள், ஒடும் செம்பொனும் ஒக்கவே நோக்குவார்.” இதற்கு மேல் அவர்கள் இயல்பு ஒன்றைச் சொல் கிருர் பரிபாடலில் உள்ள கருத்து விரிந்து மலர்ந்தது போல அப்பகுதி இருக்கிறது.

  • கூடும் அன்பினிற் கும்பிட லேஅன்றி

விடும் வேண்டா விறலின் விளங்கினர்.” அன்பு நிறைந்து கூடியதல்ை இறைவனே வழி படுவதையன்றி முக்தியும் வேண்டாம் என்று சொல்லும் வீரம் அவர்களிடம் விளங்கியதாம். பரிபாடற் புலவர்கள் மீண்டும் மீண்டும் வழிபாடு செய்வதே வேண்டும் என் ருர்கள். முக்தி வேண்டாம் என்று வெளிப்படையாகச் சொல்லவில்லை. 'கும்பிடலே வேண்டும் என்று அவர்கள் சொன்ன கருத்துக்குப் பின்னும் அரண் அமைத்து, வீடும். வேண்டாம்; கும்பிடல் போதும் என்று இந்தத் தொண் டர்கள் கினேப்பதாகச் சேக்கிழார் கூறினர். - - 'அன்பு முதிர்ச்சியால் கும்பிடுவதில் இன்பம் உண் டாகிறது. அந்த இன்பம் வேண்டும் என்பது ஒரு கிலே. 'வீடு என்ற ஒன்று குறைவு இலா இன்பத்தைத் தருவது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆலைக்_கரும்பு.pdf/53&oldid=744418" இலிருந்து மீள்விக்கப்பட்டது