பக்கம்:ஆலைக் கரும்பு.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

то ஆலேக் கரும்பு இறைவனிடம் கம்மைப் படிப்படியாக அழைத்துச் செல் கிருர்கள். முதலில் பிண்டலிங்கத்தைக் காட்டிப் பிறகு அண்டலிங்கத்தைக் காட்டி அப்பால் இறவனுடைய அருளமுதக்கடலிலே புகும் வழியையும் காட்டுகிருர்கள். பிண்டலிங்க தரிசனத்தினுல் நம்மிடம் பக்தி முறுகு கின்றது. பிறகு அண்டலிங்க தரிசனம் செய்கிருேம் உருவம் இல்லாமல் இருப்பினும் உருவம் உடையவனகத் தோற்றும் இறைவன் அடைய வேண்டும் என்ற வேட்கை நாளடைவில் எழும்பி வலிமை அடைகிறது. . . . . இறைவனே அண்டலிங்கமாகக் கண்டவர்கள்ே பிண்டலிங்கமாகிய அருட்குறியை நமக்குக் காட்டியிருக் கிருர்கள். அருளை யுணர்ந்து அதன் அடையாளமாகிய குறியை நாம் இந்த நிலையில் கண்டு இன்புறக் காட் இதற்கும் இறைவனுக்கும் தொடர்பு இல்லை என்று சொல்லலாமா? மனப்பருவம் அடைந்த கட்டிளங்காள ஒருவன் தமிழ் நாட்டில் ஒர் ஊரில் இருக்கிருன். பருவம் வந்த அழகிய மட மங்கை ஒருத்தி காசியில் இருக்கிருள். இருவருக்கும் திரும்ணம் செய்யலாம் என்று ஏற்பாடு செய்கிருர்கள். மணமகன் பெண்ணப் பார்த்ததில்லை. "பெண். அழகுள் ளவளாக இருப்பாளா? அல்லது சப்பை மூக்கும். எலிக்கண்ணும் உடையவளாக இருப்பாளோ?" என்ற சந்தேகம் உண்டாயிற்று. காசிக்கு அவனே அழைத் துப் போவதற்கு எத்தனே செலவாகும்? பெண்ண்ேக் கண்டால் அவன் கல்யாணம் செய்து கொள்வான் என்ற உறுதி ஏற்படுவதற்குமுன் இந்தச் செலவைப் பெண் விட்டுக்காரர்கள் ஏற்றுக் கொள்வார்கள்ா? அதற்காக ஒரு காரியம் செய்கிருர்கள். பெண்ணின் போட்டோவை எடுத்து அனுப்புகிருர்கள். அதைப் பையன் பார்க்கிருன். மூக்கும் முழியு மாக் அந்த மங்கை இருப்பதைக் காண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆலைக்_கரும்பு.pdf/76&oldid=744443" இலிருந்து மீள்விக்கப்பட்டது