பக்கம்:ஆலைக் கரும்பு.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தங்காதரன்' 83. குள் அடங்கியது போல் அது அடங்கியது. இதைக் காள மேகப் புலவர் அழகாகப் பாடினர். • விண்ணுக்கடங்காமல் வெற்புக் கிடங்காமல் மண்ணுக் கடங்காமல் வந்தாலும்-ப்ெண்ணே இடத்திலே வைத்த இறைவர் சடாம குடத்திலே கங்கைஅடங்கும். மனமும் ஆகாச கங்கையைப் போன்றதுதான். அலை பாய்ந்து ஒடிச் சிதறிப் போகும் இயல்பை உடையது. அதை ஒரு முகமாக கிற்க வைக்கும் ஆற்றல் சிவபிரா னுக்கு இருக்கிறது. கில்லாத ைேரச் சடையின் மேல் நிற்பிக்கும் இறைவனே, கிலேயாமல் ஒடி எதை எதையோ நினைக்கும் நெஞ்சை ஒருமுகப் படுத்தித் தன்னையே கினைந்து இன்புறச் செய்வான். இந்தத் கருத்தைத் திரு காவுக்கரசர் சொல்கிருர் நில்லாத நிர்சடைமேல் நிற்பித் தானே நினையாளன் நெஞ்சை நினவித் தானேக் கல்லா தனஎல்லாம் கற்பித் தானேக் கான தனஎல்லாம் காட்டி ேைன. - ஒன்றையே நினைக்கும் இயல்பு இல்லாத மனத்தை ஒரு. முகப்படுத்தித் தன்னையே நினைக்கும்படி செய்த அருள், மோட்ச இன்பத்தைத் தந்ததற்குச் சமானமாகும். வீட்டைத் திறந்து வைத்து உள்ளே கொண்டு போய் உட் கார்வைப்பதற்கும், "நீ உள்ளே போய் உட்கார் அப்பா" என்று சொல்லி அந்த வீட்டின் சாவியைக் கொடுப்பதற். கும் அதிக வேற்றுமை இல்லை. சாவியைப் பெற்றவன் மாளிகையைத் திறந்து உள்ளே புகுவதற்கு நெடுநேரம் ஆகாது. ,, ... • . . . . * * . ... . கங்காதரன் இந்தச் சாவியைத் தருகிருன். பகீரத னுக்கு உபயோகம்ாவதற்காகக் கங்கையை அடக்கினன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆலைக்_கரும்பு.pdf/89&oldid=744457" இலிருந்து மீள்விக்கப்பட்டது