பக்கம்:ஆலைக் கரும்பு.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கங்காதரன் 85 நீர் குளிர்ச்சிக்கு அடையாளம். "அன்பென்னும் நீர்” என்பார்கள். அன்பையே ஈரம் என்றும் செல்வார்கள். கங்கை நீருருவம் உடையது. அதற்கு இயற்கையாக ஈரம் இருக்க வேண்டும்; அன்பு இருக்க வேண்டும்; இரக்கம் இருக்க வேண்டும். பகீரதன் செய்த தவத்தை எண்ணினல் கல்லும் கரையும். அப்படி இருந்தும் கங்கை இரங்கவில்லை. அதனிடம் ஈரம் இல்லா மற் போயிற்று. அது புனிதம் நீங்கியது என்பதற்கு, 'என்னே ஏற்பவர் யார்?' என்று கருணேயின்றிக் கேட்ட கேள்வியே சான்று. கொதித்த வெங்கீரை இறக்கி வைத் தால் ஆறும். தண்ணிர் விட்டு வளாவில்ை ஆறும். கங்கை யின் அகங்காரம் இறைவனல் ஆறியது. அவன் கருணயே உருவானவன். ஏழைக்கு இரங்குபவன். அந்தக் கரு ணைக் கடலில், இரக்கம் இல்லாமல் இருந்த கங்கை புகுந்து தன் வெம்மை மாறியது. அதுவும் குளிர்ந்தது, புனிதம் அடைந்தது. - - புரிசடைமேற் புனல் ஏற்ற புனிதன் தான்காண். என்று அப்பர் பாடுகிருர் அவன் இயற்கையாகவே புனி. தன் அந்தப் புனிதத்தன்மை எல்லா அழுக்கையும் போக்க வல்லது. புனிதம் நீங்கியிருந்த கங்கையாகிய புனல்த் தன். புரிந்த சடையின்மேல் ஏற்று மீட்டும் புனிதமுடைய. தாக்கினன். - ' ' - - - - - - - - - - - : . . . * * : *.*. . . . . . . . . . நில்லாத நீரைச் சடையில் நிற்கச் செய்த கதை பல அற்புதமான கருத்துக்ககள் உள்ளடக்கிக் கொண் டிருக்கின்றது. கங்காதரன் மனத்தை யடக்கும்வழியைக் காட்டுவான், துய்மையை அருளுவான் என்ற கருத்தை அந்தக் கதை காட்டுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆலைக்_கரும்பு.pdf/91&oldid=744460" இலிருந்து மீள்விக்கப்பட்டது