பக்கம்:ஆலைக் கரும்பு.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- இயற்கையான அன்பு என்க்குச் சம்பளம் போதாது. வருகிற சம்பளத் தைக் கொண்டு வாழ வகையில்லே. அதனல் யாரிட மாவது கடன் வாங்கித்தான் பிழைக்கவேண்டும். கடன் வாங்கினல் திருப்பிக் கொடுக்கவேண்டுமே ; அதுதான் முடியாத காரியம். ஆகையால் கடனும் வாங்குவது இயலாது. யாரிடமாவது கெஞ்சிக் கேட்கலாம் என்ருல் அதற்கு மானம் இடம் கொடுக்காது. இந்த கிலேயில் அவரைச் சிநேகம்-பிடித்தேன். நல்ல வேளேயாக அவர் என்னைப் போலப் பரதேசியாக இல்லாமல் இறைவன் கொடுத்த வசதிகளோடு வாழ்கிருர். அவர் என்னிடம் அன்பு பூண்டார். கானும் அவரிடம் மிகுதியான நண்பு பூண்டிருக்கிறேன். எனக்கு என்ன துன்பம் வந்தாலும் அவர் மலேபோல் நின்று தாங்குவார்" என்று ஒரு கண் பரைப்பற்றி ஒருவர் சொல்கிருர், - தம்முடைய குறைகளே நீக்கும் செல்வமும் வள்ளன் மையும் உடையவர் என்பதல்ைதான் அந்தச் செல்வரிடம் இவருக்கு நட்பு உண்டாயிற்று. இன்ன லாபம் கிடைக்கும் என்று எதிர்பார்த்து வியாபாரம் செய்வதைப் போல, இந்த கட்பை மேற்கொண்டிருக்கிருர் இவர். இவர் கருதிய லாபம் அல்லது உதவி கிடைக்காவிட்டால் அந்த நட்பு ஆட்டம் கொடுத்துவிடும். "அவனிடம் பணம் இருந்தால் நமக்கு என்ன ஆயிற்று? அவன் பாட்டுக்கு அவன், கம் பாட்டுக்கு நாம் இருக்கிருேம். எச்சிற் கையால் காக்கை ஒட்டாத அந்த மனிதனைச் சுற்றித் திரிவதில் ஒரு பயனும் இல்லை' என்ற அறிவு இவருக்கு வந்து விடும். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆலைக்_கரும்பு.pdf/92&oldid=744461" இலிருந்து மீள்விக்கப்பட்டது