பக்கம்:ஆலைக் கரும்பு.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்கையான அன்பு - 89 இறைவனிடம் அன்பு பாயும் இயல்புடைய உத்தம பக்தர் களைக் காண்பது அரிது. காரைக்காலம்மையார் அத்தகைய அரிய பக்தர் வரிசை யில் சேர்ந்தவர். அவர் எம்பெருமானிடத்தில் இன்னது வேண்டும் என்று கேட்டதை விரும்பாதவர். அப்படி ஓரிரண்டு தடவை எதையாவது கேட்டாலும் அதை வற்புறுத்துவதில்லை. இறைவனிடம் அன்பு செய்வதற்குப் பயன் ஒன்று உண்டு என்ற கினேப்பே இன்றி அன்பு செய்தார். அவர் சொல்வதைச் சிறிது கேட்கலாம். ,★ சிவபெருமான் இம்முடைய பிறவி நோயைப் போக்கு வார்; காலம் வரும்போது அஞ்சேல் என்று அருள் செய் வார். இந்த உலகத்தில் வரும் துன்பங்களால் கலியாமல் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையோடு இறைவனிடம் அன்பு செய்பவர் பலர் உண்டு. எனக்கு அத்தகைய கனவு வருவது இல்லை. எனக்கு இடரே இல்லை என்று சொல்ல இயலாது. இடர்களிடையேதான் வாழ்கின்றேன். அந்த இடர்களே எம்பெருமான் போக்கமாட்டான் என்று யாரே லும் சொன்னலும் அவனிடம் எனக்கு உள்ள அன்பு மாருது என் இடரைக் களைய வேண்டாம்: ஐயோ.. இப்படியெல்லாம் இடர்ப்படுகின்ருளே " என்ற இரக்கமா, லது அவனுக்கு இருக்கலாம்.அந்த இரக்கம்கூட அவனிடம் இல்லை என்று யாரேனும் சொல்லட்டும் அல்லது உண்மை யாகவே அவனுக்கு இரக்கம் இல்லாமலே போகட்டும். அதைப்பற்றி எனக்குக் கவலை இல்லை. "நீ இப்படி இருந்து வாழ்வாயாக'.என். இது அவனுடைய திருவருள் என்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆலைக்_கரும்பு.pdf/95&oldid=744464" இலிருந்து மீள்விக்கப்பட்டது