பக்கம்:ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/50

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48 □

ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின்

நூல்கள், வியப்பு நூல்கள் பல ஐன்ஸ்டைனின் மூல நூலைப் பெரிதும் பாராட்டுமளவுக்கு ஏறக்குறைய 3775 நூல்கள் வெளிவந்தன என்றால் அந்த நூல் எப்படிப்பட்ட புரட்சியை அப்போது உண்டாக்கி இருக்கும் விஞ்ஞான உலகத்தில் என்பதை, நாம் சிந்தித்து ஆச்சரியமடைகிறோம் இல்லையா?

சார்பு நிலைக் கொள்கையை, ஐன்ஸ்டைன் இரண்டு வகையாகப் பிரித்தார், அவற்றுள் ஒன்றைப் பொது என்றும் மற்றொன்றைச் சிறப்பு என்றும் வரம்பு கட்டினார்.

பொது என்றால் என்ன? புவிஈர்ப்பு சக்தி பற்றியதும் மற்ற பிற விசைகளோடு புவிஈர்ப்புச் சக்திக்குத் தொடர்புடையக் கொள்கைகளை உடைய பிரிவுக்குப் பொது, என்று பெயரிட்டார்.

புவிஈர்ப்பு என்ற கொள்கை இல்லாமல்; மற்ற எல்லா உண்மைகளைப்பற்றியும் ஆராய்ந்து விளக்குவன எல்லாம் சிறப்புக்கொள்கையைப் பற்றியனவாகும்.

இந்த சிறப்புப் பிரிவில் உருவானதே உலகத்தை உலுக்கியெடுத்த அணுகுண்டு பிரச்னை. அணுகுண்டு செய்வதற்குரிய அறிவியல் விதி E-MC2 என்ற சமன்பாடு தத்துவத்தை ஏற்கனவே நாம் விளக்கியுள்ளதை நீங்கள் படித்திருக்கிறீர்கள்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டைனுக்கு முன்பு ஏறக்குறைய நூற்று ஐம்பத்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விஞ்ஞான வித்தகர் சர். ஐசக் நியூட்டன் கண்டுபிடித்த அறிவியல் விதியின்படி, காலம், வெளி, பொருள் அனைத்தும் தனித்தனி என்று அவர் கூறினார். அவரது இந்தக் கொள்கை தவறானது என்றார் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்.

‘காலம், வெளி, பொருள்’ ஆகிய மூன்றும் ஒன்றுக்கு ஒன்று சார்புடையன என்று உறுதியை அறுதியிட்டு இறுதியாக உரைத்தார்-ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்.