பக்கம்:ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/7

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

□ 5

முடியும் என்பதை நாம் எண்ணியெண்ணி வியப்படைகிறோம் அல்லவா?

இந்த ‘அணு’ சக்தியை, திருக்குறள் காலமான இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பேயே, சில ஆயிரம் ஆண்டு காலக் கட்டத்தில் தமிழ் மக்கள் அறிந்து வைத்திருந்தார்கள் என்ற ஓர் உண்மை புலப்படுகின்றது இல்லையா?

அந்த அணு சக்தியைத்தான், 19ஆம் நூற்றாண்டைய மேனாட்டு மேதைகளான மேடம் க்யூரி தம்பதிகளும் ஆல்பர்ட் ஐன்ஸ்டைனும் ஊடுருவி, ஆய்ந்து, பல உண்மைகளை உய்த்துணர்ந்து உலகுக்கு உணர்த்தினார்கள் என்று படித்து நாம் பெருமிதம் அடைகின்றோம்! அவர்களைப் பாராட்டுகின்றோம்.

கம்பன் கண்ட ‘அணு’
‘கோன்’ ஆக மாறிய விந்தை

கவிச் சக்கரவர்த்தி என்று கன்னித் தமிழ் பாராட்டும் கவிஞர் கம்பர் பெருமான்!

கவி பாடுவதில் அவர் மன்னர் மன்னனாக விளங்கியவர். அவர் எழுதிய ‘இராம காதை’யில் ஓர் பகுதி இரண்ய வதைப் படலம்.

மாவீரன் இரண்யன் தனது மகன் பிரகலாதனைப் பார்த்து. “உனது கடவுள் விஷ்ணு இந்த தூணிலே இருக்கிறானா?” என்று தகப்பன் கொடுத்த வினாவிற்கு விடையாக மகன் கூறும் கட்டத்தில் வரும் ஒரு பாடலில்,

“சாணிலும் உளன், இந்நின்ற தூணிலும் உளன், ‘அணு’வைச் சத கூறுகளிட்ட ‘கோனி’லும் உளன், என்று கம்பர் பேசுகிறார்.

அதாவது, ஒரு சாண் அளவுள்ள இடத்திலும் கடவுளே இருக்கிறார், இங்கே நிற்கின்ற இந்தத் தூணிலும் கடவுள் உள்ளார். ‘அணு’ என்ற ஒரு சிறு நுண்பொருளை நூறு