பக்கம்:ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/78

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



76 □

ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின்



ஐன்ஸ்டைனுடைய அறிவாற்றலை உலகுக்கு விளக்கிய
அவருடைய மூளை

நோபல் பரிசு பெற்ற ஐன்ஸ்டைன், தனது 76வது வயதில், 1955-ம் ஆண்டு இறந்தபோது, அவருடைய சிந்தனைக் கபாலத்தில் இருந்த மூளைப் பகுதியை தனியே எடுத்து தக்க பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. இன்று வரையிலுள்ள உடற்கூறு விதிகள் இந்த மூளையினுடைய தோற்றம்போல யாருக்கும் அமைந்திருக்கவில்லை என்று மானிட உடற்கூறு விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

வட அமெரிக்காவின் கனடா நாட்டிலுள்ள ஹாமில்டன் நகர் Mc Master University மெக்மாஸ்டா் பல்கலைக் கழகத்தின் அறிவியல் துறை பேராசிரியர் ஆன்டாரியோ என்பவர், 35 ஆண்கள் மூளைகளையும் 56 பெண்கள் மூளைகளையும் எடுத்து, உடற்கூறு சட்டவிதிகளின்படி ஆராய்ச்சி செய்து பார்த்தார். அந்த மூளைகள் எல்லாம் சாதாரண மக்களுக்கு அமைந்துள்ள மூளைப்பகுதிகளாகவே காணப்பட்டதாம்.

65 வயதுக்கு மேற்பட்ட 8 ஆண்களுடைய மூளைக்கூறுகளையும் அந்த பேராசிரியர் ஆராய்ச்சி செய்து பார்த்த போது, அவரவர் மூளை அவரவருடைய வயதுக்கு ஏற்றவாறு சாதாரணமாக எல்லா மக்களுக்கும் அமைந்துள்ள மூளைப்பகுதியைப்போலவே இருந்ததாகக் கண்டார்.

பொதுவாக, இந்த மூளைகளோடு ஆல்பர்ட் ஐன்ஸ்டைனுடைய மூளையை அவர் ஒப்பிட்டுப் பார்த்தபோது, ஐன்ஸ்டைனுடைய மூளையின் இரண்டு பகுதிகள், அதாவது கீழ்மக்களது தரத்தில் அல்லது நிலையில் மற்றவர்களை விடத் தாழ்ந்த நிலையில் அமையாமல், ஐன்ஸ்டைனுடைய மூளை அமைப்பு முறை, கட்டமைப்பு மற்ற மூளைகளைக் காட்டிலும் குறுகலாயிராமல், மூளைவரை-