பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆணிமுத்துகள்

117


கூறியுள்ளார். ஆனால் மன்னனோ, தன்னை வணங்கினும் வணங்காவிடினும் மக்களை வாழவைக்க வேண்டும். அது அவனது கடமை. நாட்டில் வறுமை என்றால் கடவுள் தப்பித்துக் கொள்கிறார். மன்னன்தான் அகப்பட்டுக் கொண்டு கிடந்து விழிக்கிறான். ஆளத் தெரியவில்லை என்று ஆண்டவனை யாரும் பழிப்பதில்லை; மன்னனது தலையைத்தான் மக்கள் உருட்டுகிறார்கள். எனவே, மாதேவனைவிட மன்னனுக்குத்தான் மக்களைக் காப்பதில் பொறுப்பு மிகுதி - அக்கறை அளவு கடந்தது. ஆகவே, உண்மையில் மக்களுக்கு இறைவன் எனப்படுபவன் அந்த ஆண்டவன் கூட அல்லன்; முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் தான் மக்களுக்கு இறைவன் என்றார் ஆசிரியர். எனவே, இந்தக் குறளுக்கு மன்னவன் மக்கட்கு இறைவன் போன்றவன் என்று பொருள் பண்ணாமல், மன்னவனே மக்கட்கு இறைவன் என்று பொருள் கூறுக. இதனாலன்றோ "திருவுடை மன்னரைக் காணின் திருமாலைக் கண்டேனே என்னும்" என ஆழ்வார் திருவாய்மொழியில் அருளிச் செய்துள்ளார்; கடவுள் தத்துவத்தை மன்னனிடத்தில் கண்டிருக்கிறார்.

கடவுளர்கள் தம் வேலைகளை மக்கள் தலைவரிடம் ஒப்படைத்து விட்டுக் கவலையின்றி இன்பமுடன் பொழுது போக்குவதாகக் 'கண்டியரசன்' தெரிவித்திருக்கிறான், இலங்கையில் ஒருகால் வறுமை தலைவிரித்தாடியது. மக்களைக் காப்பாற்றக் கடமைப்பட்ட கண்டியரசன் தமிழகத்துச் சோழநாட்டில் வாழ்ந்த சடையப்ப வள்ளலிடம் உதவி வேண்டினான். சோழ நாட்டிலிருந்து கப்பல் கப்பலாய்க் கண்டிக்கு நெல் கிடைத்தது. நன்றி பாராட்டு முகத்தான் கண்டி மன்னன் பாடல் ஒன்று எழுதி வள்ளல் தலைவலற் கனுப்பினான். அதில் என்ன எழுதியனுப்பினான்? "சிதம்பரத்தில் ஒருகடவுன் (சிவன்), ஆடிப் பாடிக் களியாட்டத்தில் மூழ்கிக்; கிடக்கிறார்; திருவரங்கத்தில் .