பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

160

ஆழ்கடலில்


'ஒருமை பன்மை வழு' என எவரும் எண்ணவேண்டா! இவர்கள் உண்மையில் ஏதிலரா யிருந்திருப்பின் ஒருமுறை நோக்கியதோடு விட்டிருப்பர். ஆனால், இவர்கள் 'விடாக் கண்டர் தொடாக்கண்டர்கள்' ஆகிய காதலர்கள் ஆதலின், ஏதிலார் போல நோக்கும்போது பலமுறை நோக்கித்தான் இருப்பார்கள். இந்நுட்பத்தை 'உள்' என்னும் பன்மைமுடியில் அடக்கிக்காட்டிய திறனே திறன்!.

பரிமேலழகர் இந்தக் குறளைத் தோழி கூற்றாகக் கொண்டுள்ளார். 'சிவபூசையில் கரடி விடுவது, போல, முதல் கண்ணுறுகையிலேயே (முதல் சந்திப்பிலேயே), தோழி தலையிடுவதாக எந்த 'அகப்பொருள் நூலும்' சொல்லவில்லை யாதலின், இதனைக் கவிக்கூற்றாகக் கொள்ளலாமே! அதனினும், தலைமகன் கூற்றாகவே கொள்ளலாமே! 'அவள் ஏதிலார்போலப் பொதுவாக நோக்குவதால் நம்மேல் காதல் இல்லை என்று பொருள் இல்லை; காதலை உள்ளே வைத்துக்கொண்டும் வெளியிலே அயலார் போல நோக்குவது உண்டு' எனத் தலைமகன் தன் உள்ளத்துக்குச் சொல்லி ஊக்குவதாகக் கொள்ளலாமே இந்தக்குறளை! ஆகவே, அவள் அடிக்கடி நோக்கும் பொது நோக்கத்தைக் கொண்டே, அவளுக்குத் தன்மேல் காதல் இருப்பதாகக் குறிப்பாய் அறிந்து கொண்டான் தலைமகன். பொருள் பால் ஊறும் அறிவு

(தெளிவுரை) தோண்டிய அளவிற்கு ஏற்ப மணற் கேணி நீர் சுரக்கும்; அதுபோல், படித்த அளவுக்கேற்ப அறிவியல் பெருகும்.