ஆணிமுத்துகள்
169
கைம்மண் அளவு கல்லாதது உலகளவு', 'கல்வி கரையில கற்பவர் நாள்சில' -- ஆதலின், சாந்துணையும் கற்கச் சொல்கிறார்.
இப்பொழுது இக்குறட் கருத்தில் ஒரு புரட்சிப் புயல் வீசப்போகிறது:-- எந்த நாட்டாரும் எந்த ஊராரும் படிக்கலாம், இங்கே வசதியில்லை என்று ஏய்க்காதே - எந்த நாட்டுக்கும் எந்த ஊருக்கும் சென்று படிக்கலாம். உடல் நலம் இல்லை -- பணவசதியில்லை என்று ஏய்க்காதே - படிப்பினால் செத்தாலுஞ் சரி -- சாகும்வரை படி, படிப்பவனுக்கு எந்த நாட்டிலும் எந்த ஊரிலும் இடங்கொடுத்து மதித்து, சாகும் வரையுங் கூட ஆதரிக்கவேண்டும்'.- இது தான் சிந்தனையைச் சுழற்றும் அந்தப் புரட்சி புயல்!
(தெளிவுரை) மனைவிக்கு மாண்பு இருந்தால், குடும்பத்தில் இல்லாதது என்ன? எல்லாம் இருக்கும். மனைவிக்கு மாண்பு இல்லையானால், குடும்பத்தில் உள்ளது என்ன? ஒன்றும் இருக்காது.
- "இல்லதெ னில்லவண் மாண்பாளா லுள்ளதெ
- எல்லவள் மாணாக் கடை"
(இல்லது என் இல்லவள் மாண்பானால்; உள்ளது என் இல்லவள் மாணாக்கடை).
(பதவுரை) இல்லவள் மாண்பானால் = மனைவி மாட்சிமையுடன் விளங்கினால், இல்லது என் வீட்டில் இல்லாத