170
ஆழ்கடலில்
பொருள் என்ன? இல்லவள் மாணாக்கடை - மனைவி மாண்பின்றி யிருந்தால், உள்ளது என் = வீட்டில் இருக்கக் கூடிய பொருள் யாது? ஒன்றும் இராது. (இல்லவள் - மனைவி; மாண்பு = நற்குண நற்செய்கை தகுதி திறமை முதலியன உடைத்தா யிருத்தல்.
(மணக்குடவருரை) ஒருவனுக்கு மனையாள் மாட்சிமையுடையாளானால், எல்லா மிலனே யாயினும் இல்லாதது யாது? மனையாள் மாட்சிமை இல்லாளானால் எல்லா முடையானாயினும் உண்டானது யாது?
(பரிமேலழகருரை). ஒருவனுக்கு இல்லாள் நற்குண நற்செய்கையளாயினக்கால் இல்லாததியாது! அவள் அன்னளஎல்லாக்கால் உள்ளது. யாது?
(விளக்கவுரை) இந்தக் குறள், குடும்ப அறிவியலின் (Home Science) எல்லைக்கோட்டைத் தொட்டுவிட்டது - இல்லை, எல்லைக்கோட்டையும் தாண்டிவிட்டது. இதற்கு மேல் இன்னும் எந்தெந்தச் சொற்களால் குடும்பக் கலையின் உயர் நிலையை உரைத்துக் காட்ட முடியும்? வீட்டில் ஒன்றும் இல்லாவிடினும் மனைவிக்கு மாண்பு மட்டும் இருந்து விட்டால், மனைக்கு வேண்டிய மற்ற எல்லாம் இருப்பதாகவே பொருளாம். வீட்டில் எல்லாமே இருந்தாலும் மனைவிக்கு மாண்பில்லையாயின் ஒன்று இல்லாததாகவே பொருளாம். இதனை இல்லது என்? உள்ளது என்? என்னும் வினாக்களால் விளங்கவைத்துள்ளார் ஆசிரியர். இங்கே வள்ளுவர், திட்டவட்டமாகத் தெளிவான ஒரு முடிவுக்குத் துணிந்து வந்து விட்டவராகக் காணப்படுகிறார். வேறு எது இருந்தாலும் இல்லாவிட்டாலும், குடும்பத்துக்கு உண்மையான மூலதனம் (Capital) மனைவியே - அதுவும் மாண்புமிக்க மனைவியே என்பது வள்ளுவர் கருத்து. இதனை இந்தக் குறளில் இல்லவள் - இல்லவள் என இருமுறை கூறியிருப்ப