பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

172

ஆழ்கடலில்


துறைகளிலும் இவ்விதமே -- இவ்விதமே! ஆவது முன்னவளால்; அழிவது பின்னவளால், இதனாலேயே, முன்னவள் வீடு எல்லாம் உடையதாகவும், பின்னவள் வீடு ஒன்றும் இல்லாததாகவும் வள்ளுவரால் உரைக்கப்பட்டன. இக் குறட் கருத்தே, 'இல்லாள் அகத்து இருக்க இல்லாதது ஒன்றில்லை' என்னும் ஒளவையின் மொழிக்குச் செவ்வியளிக்கின்றது. இங்கே, திருவள்ளுவரின் மனைவியார், இளையான்குடி மாறரின் மனைவியார் போன்ற நற்பெண்டிரின் வரலாறுகள் நமக்குப் போதிய சான்று பகரும், மாண்பு அற்ற பத்து மாட்டுக்காரி, மாண்பு பெற்ற ஒரு மாட்டுக்காரியிடம் பால் வாங்கிய கதை பலரும் அறிந்ததே!

சோர்விலாள் பெண்

(தெளிவுரை) தன்னையும் காத்துக்கொண்டு, தன் கண வனையும் போற்றி, புகழ்ச்சொல்லை நிலை நிறுத்தி, என்றும் சோர்வுபடா திருப்பவளே பெண்ணாவாள்.

"தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்"

(பதவுரை) தற்காத்து = (ஒழுக்கம், உடல் நலம் முதலியவற்றால்) தன்னையும் காப்பாற்றிக்கொண்டு, தற்கொண்டான் பேணி = தன்னை மணந்து கொண்ட கணவனையும் உணவு முதலியவற்றால் காத்துப் போற்றி, தகைசான்ற சொல் காத்து = தகுதி நிறைந்த புகழ்மொழியினையும் காத்து நிலை நிறுத்தி, சோர்விலாள் பெண் = (இவற்றிலும் வேறு எந்தக் காரியத்திலும்) என்றும் சோர்வு கொள்ளாதவளே சிறந்த பெண்ணாவாள். (தற்கொண்டான் = கணவன்; பேணுதல் = உபசரித்தல்.-காத்தல்; தகைசான்ற சொல் = புகழ் மொழிகள்).

(மணக்குடவருரை) தன்னையுங் காத்துத் தன்னைக் கொண்ட கணவனையும் பேணி, நன்மை யமைந்த புகழ்