பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆணிமுத்துகள்

193


(மண உரை) அறிவில்லாத பொறிகளையுடைய பாவைகள் போல ஒரு குணமும் உடையனவல்ல; எட்டுக் குணத்தினை யுடையவன் திருவடியினை வணங்காத தலையினையுடைய உடம்புகள்.

(பரி- உரை) தத்தமக்கேற்ற புலன்களைக் கொள்கையில்லாத பொறிகள் போலப் பயன்படுதல் உடையவல்ல, எண்வகைப்பட்ட குணங்களையுடையானது தாள்களை வணங்காத் தலைகள். எண் குணங்களாவன : - தன் வயத்தனாதல், தூயஉடம்பினனாதல், இயற்கை உணர்வினனாதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேரருள் உடைமை, முடிவில் ஆற்றல் உடைமை, வரம்பில் இன்பம் உடைமை என இவை. இவ்வாறு சைவாகமத்தில் கூறப்பட்டது. அணிமாலை முதலாக உடையன எனவும், கடையிலா அறிவை முதலாக உடையன எனவும் உரைப்பாரும் உளர்.

(ஆராய்ச்சியுரை) எண் குணத்தான் என்பதற்கு, எட்டுக் குணங்களையுடையவன் என்றே பரிலேழகர் முதலியோர் பொருள் கூறியுள்ளனர். அது ஒரு நல்ல பொருள் தான். ஆனால், பரிமேலழகர் சைவ ஆகமத்தில் கூறப்பட்டுள்ள எட்டுக் குணங்களைக் குறிப்பிட்டுள்ளார். வேறு சிலர், வட நூலில் உள்ள அணிமா முதலிய எட்டைக் குறிப்பிட்டுள்ளனர். இன்னும் சிலர், சமண நூலில் உள்ள கடையிலாவறிவு முதலிய எட்டைக் குறிப்பிட்டுள்ளனர். இதற்கு ஏன் இவ்வளவு தொல்லை? இவற்றையா எண் குணம் என்று திருவள்ளுவர் இயம்பியிருப்பார்? கையில் வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவது ஏன்? இறைவனின் எட்டுக் குணங்கள் இன்னின்னவை என்று திருவள்ளுவரே தெரிவித்துள்ளாரே. 'கோளில் பொறியின்' என்னும் இக்குறள் ஒன்பதாவது குறளாகும். இதற்குமுன் எட்டுக் குறள் களிலும், இறைவனை எட்டுக் குணங்கள் உடைய