ஆணிமுத்துகள்
25
கூட, அப்பேரை ஆட்சியாளரே தட்டிக்கொண்டு போய் விடுகிறார்களல்லவா?
இவ்வரிய கருத்தைக் கூறும் திருக்குறளின் பொருட்பால், பழைய உரையாசிரியர்களால் பல்வேறு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அரசியல், அங்கவியல், ஒழிபியல் என மூன்றாகப் பகுத்துக்கொண்டார் பரிமேலழகர். மணக்குடவரோ, அரசியல், அமைச்சியல், பொருளியல், நட்பியல், துன்பவியல், குடியியல் என ஆறாகப் பகுத்துக்கொண்டார். இன்னும் பலர் பலவிதமாகப் பகுத்துக் கொண்டனர். உண்மையில் திருவள்ளுவர் எவ்வாறு பகுத்திருந்தாரோ? அதனை ஆரறிவார்? ஐயோ குறளே! ஆயினும், நாம் அரசியலை முதல் இயலாகத் தொடங்கிக் கொள்ளலாம். அரசியலோடு இன்னார் இன்னாரே தொடர்பு கொள்ளலாம்; இன்னார் இன்னாரெல்லாம் தொடர்பு கொள்ளலாகாது, என்பது ஒரு பொது விதி. ஆயினும், நாம் இப்போது திருவள்ளுவரின் திருக்குறள் அரசியலோடு தொடர்பு கொள்வோம்.
அரசனுக்கு வேண்டிய இயல்புகளைச் சொல்லும் பகுதி அரசியலாம். முடியரசுக்காலத்தில் அரசு-அரசன் என்று சொல்லியிருப்பதை, குடியரசுக்காலத்தில் அரசாங்கம்--அரசியல் தலைவன் என அமைத்துப் பொருள் கொள்ளலாம். இனி அரசனது இயல்பை நோக்குவாம்.
இறைவனது (அரசனது) மாண்புகளை - சிறப்பியல்புகளை-நற்குண நற்செய்கைகளைக் கூறுவது இறைமாட்சியாகும். நல்ல அரசனே கண்கண்ட இறைவன் (கடவுள்)