ஆணிமுத்துகள்
73
தான் புருவம் புறப்படுகின்றது. அதாவது, ஒவ்வொரு புருவமும் ஒவ்வொரு கண்ணின் முதல் பகுதியிலிருந்து புறப்பட்டு, கண்ணைப் பாதியளவு சுற்றி வளைத்து, கடைக்கண் முனையில் வந்து முடிந்து விடுகிறது. வில்லின் இரு முனைகளைப் போலுள்ள புருவத்தின் இரு முனைகளும், கண்ணின் இருமுனைகளைத் தொட்டுக்கொண்டுள்ளன. புருவம் இவ்வாறு கோடாமல் - வளையாமல், கண்ணின் நீள் குறுக்கிலே நேர்க்கோடாய் நீண்டிருக்குமாயின், ஏன் அப்புருவத்தின் கோணலை நிமிர்த்திவிடின், அப்புருவத்தின் அடர்ந்த மயிர்ப் பகுதி, திறந்துகாண வொட்டாமல் கண்ணை மறைத்துவிடும். அங்ஙனம் மறைத்திருப்பின், அக்கண் பார்வையால் அவன் கலங்கியிருக்கமாட்டான். இதைத்தான், 'கொடும் புருவம் கோடா மறைப்பின்' என்றார்.
இந்தப் பருவம் பொல்லாத புருவமாய் இல்லாமல் நல்ல புருவமாய் இருந்திருந்தால், உண்மையில் என்ன செய்திருக்கவேண்டும்? தன் நண்பனாகிய கண்ணைப் பார்த்து, 'ஏ கண்ணே! நீ ஏன் அந்த ஆடவனை வருத்துகிறாய்? அது முறையன்று' என்றல்லவா கடிந்திருக்க வேண்டும்? அவ்வாறு இடித்துரைப்பதற்கு இதனிடம் நேர்மையிருந்தால்தானே முடியும்? இது தான் கோணியுள்ளதே! கோணல் குணம் (ஓரவஞ்சனை) உடையவர்களிடம் நேர்மையை எதிர்பார்க்க முடியுமா? அவர்கள், தம் நண்பன் பிறரைத் தாக்கி வருத்துவதைப் பார்க்காதவர் போல் வளைந்து ஒதுங்கித்தான் போவார்கள்! நண்பனுக்கு ஆதரவாகச் சுற்றி வளைத்துத்தான் பேசுவார்கள்! இந்த நயங்களையெல்லாம் அமைத்துத்தான், 'கொடும் புருவங் கோடா(து) மறைப்பின்', என்றார், சிறிது இடைவெளி தெரியினும் அதன் வாயிலாக அக்கண் வருத்தும்; ஆதலின்