பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அறத்துப்பால்
இல்லறவியல் - இல்வாழ்க்கை
அறத்தாறும் புறத்தாறும்
"அறத்தாற்றி னில்வாழ்க்கை யாற்றிற் புறத்தாற்றிற்
போஒய்ப் பெறுவ தெவன்"

(பதவுரை) அறத்தாற்றின் = அறவழியிலே, இல் வாழ்க்கை ஆற்றின் = (ஒருவன்) இல்லறத்தை நடத்துவானேயாயின், புறத்தாற்றில் = அறவழிக்குப் புறவழியான மறவழியில் அதாவது தீயவழியில், போஒய்ப் பெறுவது = சென்று பெறக்கூடிய நன்மை, எவன் = என்ன? (ஒன்றுமில்லை).

(விளக்கவுரை) அற ஆறு - அறத்தாறு; புறஆறு = புறத்தாறு. அறத்துக்குப் புறம் அதாவது புறம்பு மறம் அதாவது தீமை. ஆறு - வழி, நெறி. ‘போய்’ என்பதுதான் 'போஒய்' என்றாயிற்று. எவன், என்ன, என் என்னுஞ் சொற்கள் ஒரே பொருள் உடையவை. எவன் என்பது பழைய வழக்கு.

உலகில் சிலரது குடும்ப வாழ்க்கை செம்மையுற நடத்தலைக் காண்கின்றோம். அந்தக் குடும்பத்தாரிடைக் குறையொன்றுங் கூறவியலாது. கணவன் மனைவி ஒற்றுமை, பெற்றோர் பிள்ளை ஒற்றுமை, விருந்தோம்பல், சுற்றம் தழுவல், பிறர்மனை நயவாமை, கள்-களவு-பொய்சூது முதலியன இன்மை, இன்பத்தில் துள்ளாமை, துன்பத்தில் கலங்காமை முதலிய பண்புகளுடன் வாழ்தல் தான் ‘அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றுதல்’ என்பது. இதற்கு எதிர்மாறான வாழ்க்கை 'புறத்தாற்றில் போகும்