பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

ஆழ்வார்களின் ஆரா அமுது


என்பது உபதேச ரத்தின மாலை. லோக சாரங்கர் முதலிய பலர் இவ்வாழ்வாரின் திருவடி சம்பந்தம் பெற்று நற்கதி பெற்றனர் என்பது வரலாறு. அமலனாதிபிரான்: இனி, இந்தத் திருப்பாணாழ்வார் அருளிச் செய்த பிரபந்தத்தில் ஆழங்கால் படுவோம். இப் பிரபந்தம் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் முதலா விரத்தின் இறுதியில் மதுரகவிகள் அருளிச் செய்த கண்ணி துண் சிறுத்தாம்புக்கு முன்னர் இடம் பெற்றுள்ளது. இத் திவ்வியப் பிரபந்தத்திற்கு பெரியவாச்சான் பிள்ளையும், அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரும் மணிப் பிரவாள நடையில் சிறந்த வியாக்கியானங்கள் அருளிச் செய்துள்ளனர். இவை தவிர, துரப்புல் வேதாந்த தேசிகனும், முநிவாகன போகம் என்ற திருநாமம் பூண்ட வியாக்கியானம் ஒன்று இட்டருளியுள்ளார். வேதாந்த தேசிகர் இப்பிரபந்தம், வேதாந்திகள் கூறும் எல்லாப் பலன்கட்கும் விதையாக நின்று பலன் தருவதாகும் என்று பகர்வர். வேதியர்தாம் விரித்துரைக்கும் விளைவுக் கெல்லாம் விதையாகும் இதுவென்று விளம்பினோமே." என்ற பாசுரப் பகுதியால் இக்கருத்தையறியலாம். இன்னும் அவர் திருப்பாணாழ்வார் அருளிச் செய்த பிரபந்தம் கதமிழ் வேதம்’ எனப்படும் நாலாயிரத்தின் சாரம் முழு வதும் அடங்கியதாகவும் கூறுவர். பாவளரும் தமிழ்மறையின் பயனே கொண்ட பாண்பெருமாள் பாடியதோர் பாடல் பத்து: என்று பாடற் பகுதியால் இதனை அறியலாம். இன்னும் அவரி, 12. தே. பி. 131. 13. டிெ 130.