பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாணர்குல விளக்கு 7; என்னைப் பைத்தியமாக்கி விட்டதே! என்பதில் கடல் போலப் பெருகிவரும் இவரது பக்திக்காதலை நாமும் உணர்ந்து அதுபவிக்க முடிகின்றது. இல்லையா? ஏழையர் ஆவிஉண் ணும்மினைக் கூற்றங்கொ லோ அறியேன் ஆழியங் கண்ண பிரான்திருக் கண்கள்கொ லோ அறியேன் சூழவும் தாமரை நாண்மலர் போல்வந்து தோன்றும் கண்டிர் தோழியர் காள்: அன்னை யீர்! என்செய் கேன்துய ராட்டியேனே!: என்று எம்பெருமானது பேரழகை உருவெளித் தோற்றத்தில் கண்டு அதுபவித்த நம்மாழ்வார் நாயகி நிலையிலிருந்து கொண்டு பட்டயாட்டை இவரும் படுகின்றார். போலும்! இதுகாறும் தனித்தனி ஒவ்வொரு உறுப்பிலும் உள்ளத்தைப் பறிகொடுத்த ஆழ்வார், எல்லா உறுப்புகளின் சேர்த்தி அழகினை ஒருங்கே அநுபவித்துத் தமது நெஞ்சு பரவசமாகப் பெற்ற பெருமையைப் பேசுகின்றார். ஆலமா மரத்தின் இலைமேல்ஒரு பாலகனாய் ஞாலம் ஏழும்.உண்டான் அரங்கத்து அரவின் அணையான் கோலமாமணி ஆரமும் முத்துத் தாமமும் முடிவுஇல்ல தோர்.எழில் நீலமேனி ஐயோ! நிறைகொண்ட (து) என் நெஞ்சினையே! (9) |பாலகன் . குழந்தை; ஞாலம் . உலகம்; கோலம் . அழகிய; ஆரம் - மாலை; தாமம் - மாலை; எழில் . அழகு; 24. திருவாய், 7, 7:1