பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாணர்குல விளக்கு 77 என்று திருமலை நம்பியுடன் சேர்ந்து பாணர் தாளைப் பரவுகின்றோம். உம்பர்தொழும் மெய்ஞ்ஞானம் உறையூரான் வாழியே! உரோகிணிகாள் கார்த்திகையில் உதித்தவள்ளல் வாழியே! வம்பவிழ்தார் முனிதோளில் வகுத்தபிரான் வாழியே! மலர்க்கண்ணில் வேறொன்றும் வையாதான் வாழியே! அம்புவியில் மதிளரங்கர் அகம்புகுந்தான் வழியே! அமலனாதி பிரான்பத்தும் அருளினான் வாழியே! செம்பதுமை அருள்கூறும் செல்வனார் வாழியே திருப்பாணன் பொற்பதங்கள் செகதலத்தில் surgéu!** என்று அரங்கநகர் அப்பனை அகங்குளிரக் கண்ட ஆழ்வாரை வாழ்த்துகின்றது வைணவ உலகம். இத்துடன் என் பேச்சினையும் தலைக்கட்டுகின்றேன். வணக்கம். 31. வாழித் திருநாமம் - 9. (அப்புள்ளை அருளிச் செய்தது)