பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூவர் ஏற்றிய மொழிவிளக்கு 12; இங்ங்ணம் மனம் மொழி மெய் ஆகிய மூன்றும் இறைவ -னிடமே மூழ்கியிருத்தலை அருளிச் செய்கின்றார். இந்த உணர்வினால்தான் என்னாகில் என்னே எனக்கு? - திரிகர் ணங்களும் எம்பெருமானைப் பற்றின. பின்பு நான் இவ்வுலகி விருந்தால்தான் என்ன? பரமபதத்திற்குப் போனால்தான் என்ன? எல்லாம் ஒன்றேதான்! எப்படிப்பட்ட இன்ப துன்பங்களையும் சமமாக அநுபவித்துக் கொண்டு சிறிதும் கவலையற்ற நிலையில் இறுமாந்திருக்கும் நிலையைத் தெரிவிக்கின்றார். எம்பெருமானைப்பற்றி அறியும் அறிவே அறிவு என்று: பொய்கையார் கூறியதைச் சிந்திக்கும்போது, தொக்கு இலங்கி யாறுஎல்லாம் பரந்துஓடித் தொடுகடலே புக்குஅன்றிப் புறம்கிற்க மாட்டாத; மற்றுஅவைபோல் மிக்குஇலங்கு முகில்-நிறத்தாய்! வித்துவக்கோட் டம்மா!உன் புக்குஇலங்கு சீர்அல்லால் புக்குஇன்ைகாண்: புண்ணியனே!" தொக்கு - திரண்டு; பரந்து . பரவி; தொடுகடல் . ஆழ்ந்த கடல்; புறம்-மற்றோரிடத்தே; புக்கு . என் நெஞ்சினுள்; சீர் . கல்யாண குணங்கள்; என்ற குலசேகராழ்வாரின் பாசுரம் நினைவுக்கு வருகின்றது. இதில் ஆழங்கால் படுகின்றோம். இந்நிலைக்குக் காரணமாக இருக்கும் உறுதியான நம்பிக்கையையும் காண்போம். உளன்கண்டாய் கன்னெஞ்சே! உத்தமன்; என்றும் உளன்கண்டாய், உள்ளுவார் உள்ளத்(து) - உளன் கண்டாய், 56. பெரு. திரு. 5:8