பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3}. 32. 33. 34, xvi பாடல்களில் படிந்துள்ள வேதாந்தக் கூறுகளும் படிமம் தானும் நீடுவழக்கத்துள்ள மரபுகளும் உட்பொருளும் நினைத்துக் கூறி ஏடுபடிப் பவர்க்குமுழுப் பயன் நல்கும் தகவல்களும் எடுத்துச் சொல்வார் பாடுபட்ட பலனெல்லாம் தருமத்தாய் பரிந்தளிக்கும் பரிசு போலே! சுப்புரெட்டி யார்வந்து நுழைந்துவிட்டால் ஓரிடத்தில் சுறுசு றுப்பும் கப்பென்று வந்துவிடும்; எழுபதிலும் விறுவிறுப்பாய்க் கடமை யாற்றும் அப்பரென்பேன்; திருநாவுக் கரையரென்பேன்; எளிமையிலும் அவரே யென்பேன்! இப்படியோர் தமிழாசான் கிடைத்ததுசெந் தமிழ்த்தாயின் இன்பப் பேறே! சிரிப்பள்ளித் தெளிக்கின்ற திருமுகத்தில் வெண்ணிறு பொலியும் பாங்கும் விரும்போடு தமிழமுதைச் சொற்பொழிவாய் மன்றத்தில் விரிக்கும் பாங்கும் உருப்போடும் மாணவர்கள் உணர்வோடு கற்றிடவே உதவும் பாங்கும் இருப்போடு வரவாகும் ஊதியம்போல் பயன்மிக்க பணியின் பாங்காம்! அறிவியலும் இலக்கியமும் கற்றவராய் இருப்பதனால் அறிவு நூல்கள் செறிவுள்ள தமிழ்மொழியில் திறமாகப் படைத்தளித்தார்; இலக்கி யத்தில்