பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxvi ஆழ்வார்களின் அருளிச் செயல்களிலிருந்து வடித்துக் கொடுத்துள்ளார் நூலாசிரியராகிய பேராசிரியர். சில காட்டுகள்: (1) தண்டனையும் ஒரு முறையில் இறைவனின் திருவருளேயாகும்’ (பக். 209.). (2) இறைவனது கருணை வெள்ளம் துன்ப வடிவிலும் நம்மை வந்தடை யும் (பக். 280). (3) பரமான்மா இன்பம் தருபவன் என்பதையும் வோன்மா இன்பம் துய்ப்பவன் என்பதை யும் அறிகின்றோம் (பக்.282), (4) உலகத்து உயிர் கட்கெல்லாம் பரமான்மாவே வாழ்வின் அடிப்படை." (பக்.283). எ. சொற்பொருள் விளக்கம் : கையாளப்படும் சொற் களுக்குப் பொருத்தமான பொருள் விளக்கம் செய்வதும் நூலின் சிறப்புகளுள் ஒன்றாகும். இந்நூலில் இத்தகைய பொருள் விளக்கத்திற்குச் சில காட்டுகள்: (1) நடலை-நிற்பது, இருப்பது, விழுவது, எழுவ தாய்ப்படுகின்ற நோய் (பக்.40). (2) பிரசாதம் என்பது, அருளுக்கிடமான திருத்துழாய் முதலியவை" (பக். 45.46). (3) கிங்கரன்-அடிமையாள்; கிங்கரன் செய்யும் தொழில் அடிமைத் தொழில், அதாவது கைங்கரியம் (பக். 34). (4) பாரமாய பழவினைகள்பொறுக்க முடியாத சுமையாகவுள்ள நெடுங்கால வினைகள் (பக். 86). (5) பயின்றது-நித்தியவாசம் செய்தது (பக். 87). (6) ஜன்ம உத்கர்ஷ அதுகர் ஷங்கள் தெரிவது-சாதியும் ஆசிரமும் ஞானமும் ஒழுக்கமும் தள்ளத் தக்கவை என்கை (பக். 220). (7 சலங்கொண்டு - தணியாத முற்றின வைரம் கொண்டு (பக். 239). ಅ ஐயத்தைத் தெளிவுபடுத்துதல்: கற்பனவற்றைக் கசடறக் கற்பதுதான் கற்கும் முறையாகும். மயக்கமும் ஐயமும் இல்லாமல் உண்மையைத் தெளிவுபடுத்துவது